பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308 மாணிக்கவாசகர்


 வேறு ஒருபொருள் என எடுத்துக்காட்டியுள்ளார். இவை ஒவ்வொன்றுக்கும் ஒர் எடுத்துக் காட்டு தருவேன்.

உள்ளுறை உவமம் : அகப்பொருள் ஒழுகலாற்றில் வெளிப்படக் கூறாது குறிப்பால் உணர்த்தத் தகுவனவற்றைக் கூறுவதற்கு அமைந்தது உள்ளுறை உவமமாகும். இது அகப் பாடல்களில் மட்டிலுமே பயின்றுவரும். இதில் வெளிப்படை யாகத்தோன்றும் கருத்துகள் உள்ளே அடிப்படையாக உறைந்துகொண்டிருக்கும் கருத்துகளுக்கு உவமையாக வரும் படி அமைக்கப்பெற்றிருக்கும். சாதாரணமாக வெளிப்படை உவவமானால் அதில் உவமேயமும் இருக்கும்; உள்ளுறை உவமமாகில் உவமேயம் வெளிப்படையாகத் தெரியாது. ஆனால், உவமைபோலக் கொண்டு இதற்கு ஒப்பான வேறு பொருளை நுண்ணுணர்வால் சிந்தித்து அறிந்து கொள்ள முடியும்.

  அந்தியின் வாயெழில் அம்பலத்துஎம்மான்
      அம்பொன், வெற்பில் 
  பந்தியின் வாய்ப்பல வின்சுளை 
     பைந்தே னொடுங் கடுவன் 
  மந்தியின் வாய்க்கொடுத் தோம்பும்
     சிலம்ப மனங்கனிய 
  முந்தியின் வாய்மொழி நீயேமொழி
     சென்றுஅம் மொய்குழற்கே
                                - திருக்-99

(அந்தி - மாலை; எழில் - அழகு; வெற்பு - மலை; கடுவன். ஆண்குரங்கு; மந்தி - பெண்குரங்கு: ஒம்பும் - பாது காக்கும்; சிலம்பு - மலை; மொய்குழல் - தலைவி)

என்ற பாடல் 'நீயே கூறென்று மறுத்தல்’ என்ற துறையில் வந்தபாடல். களவொழுக்கம் ஒழுகாநின்ற தலைமகன் தலைமகளை அடைய விரும்பித் தோழியைக் குறையிரக்கின்றான். தோழி, 'யான் குற்றேவல்மகள்; நினதுகுறையைத்