312 மாணிக்கவாசகர்
(தென்னல் - நெருநல். நேற்று: நேயத்ததாய் - நெகிழ்ச்சி யுடையதாய், நெக உடைய; ஆயம் - தோழியர் கூட்டம், அரன் - சிவன்; அம்பலம் - சபை; தேயம் - ஒளி: தெரியின் - ஆராயின்)
என்பது 'உயிரென வியத்தல்' என்ற துறையில் அமைந்தது, இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பின் பாங்கனைக் கண்டு அவனால் தெருட்டம்பெற்றுத் தான் முன்னாளில் தலைவியை எதிர்ப்பட்ட பொழிலை அடைந்து அங்குநின்ற தலைமகளைக் கண்ணுற்று 'என் உயிர் இவ்வாறு செய்து நிற்பதோ எனத் தலைவியைத் தனது உயிர் என வியந்து கூறியதாக அமைந்தது இத்திருப்பாடல்.
'நெருநல் (நேற்று) உள்ள நெகிழ்ச்சியையுடையதாக என்னைக் கூடிப் பின் நேயம் இல்லது போல என் நெஞ்சு உடையும் வண்ணம் நீங்கிப்போய் ஆயத்தின்கண்ணதாய், இன்பத்தைச் செய்தலின் அமிர்தமாய், துன்பத்தைச் செய்தலின் அணங்காய், புலப்படும் தோற்றப் பொலிவால் இறைவனது பொன்னம்பலம்போலும் ஒளியையுடைத்தாய் புலப்படாது வந்து என் சிந்தையின் கண்ணதாய், ஆராயிற் பெரிதும் மாயத்தையுடையதாய், வந்து நின்றது. இதுவே எனது மன்னுயிர்' என்பது இதன் பொருள். நேயமுடைமையும் நேயமின்மையும், இன்பஞ் செய்தலும் துன்பஞ் செய்தலும், புலப்படுதலும் புலப்படாமையும் ஒரு பொருட்கு இயையாமையின்'பெரிதும் மாயத்ததாகி' என்றான் தலைவன். "என் மாட்டு அருள் உடைத்தாய், முற்காலத்து என்னை வந்து கூடி, அருளில்லது போல என் நெஞ்சு உடை யும் வண்ணம் போய்த், தன் மெய்யடியார் குழாத்ததாய், நினைதோறும் அமிர்தம்போல இன்பம் செய்து, கட் புலனாகாமையின் துன்பம் செய்து ஆம்பலம் போலும் நல்ல தேசங்களின் கண்ணதாய் வந்து என் மனத்தகத்ததாய், இத்