பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314 மாணிக்கவாசகர்


 வரும் திருவெண்காட்டடிகளின் வாய்மொழியால் இனிது புலனாகும். ஈண்டுத் இருந்திய அன்பு என்பது, இறைவனைத் தந்தையாகவும், தன்னை மகனாகவும் (மகன்மை நெறி - ஞான சம்பந்தர்), இறைவனை ஆண்டவனாகவும் தன்னை. அடிமையாகவும் (அடிமை நெறி - அப்பர் பெருமான்), இறைவனை நண்பனாகவும் தன்னைத் தோழனாகவும் (தோழமை நெறி - சுந்தர மூர்த்தியடிகள்), 8 இவ்வாறு பல படியாக வழிபட்டு வளர்ந்து பின் இறைவனைத் தன் ஆருயிர் நாயகனாகவும் தன்னை அவனருள் விழையும் பெண்ணொருத்தியாகவும் கருதித் தன் செயலற்றுத் "தான்’ என்பது அற்று அவன்தன் செயலேயாக அடங்கி நின்றொழுகும் நிலையில் செலுத்தப் பெறும் பேரன்பாகும்." 9

இம் முறையில் மணிவாசகப் பெருமான் தம்மையாட் கொண்டருளிய சிவபெருமானை ஆருயிர் நாயகனாகவும், தம்மை, அவரது அருளார் இன்பத்திற்கு ஏக்கற்று நிற்கும் நாயகியாகவும் கருதி அன்பு செலுத்தியவர் என்பது மேற் குறிப்பிட்ட திருவெண்காட்டடிகளின் வாய்மொழியால் நன்கு துணியப்படும். அன்றியும், திருக்கோவையாரில் வரும் இரண்டு சான்றுகள் இக்கருத்திற்கு அரணாகவும் அமையும்.


8. சன்மார்க்கம். நன்னெறி, இந்நெறிக்கு மணிவாசகரை எடுத்துக் காட்டாகக் கொள்வர். இந்த ஞான நன்னெறியானது, முதல்வனை ஆன்ம நாயகனாகவும், உயிராகிய தன்னை அவனைத் தலைப்பட்டு மகிழவிழைந்த தலைவியாகவும் கருதியொழுகும் இயல்பினது என்று அறியத்தக்கது.

9. இதனை 'மதுரபாவம’ என்றும் நாயக - நாயகி பாவம்' என்றும் வழங்குவர். வைணவ சமயத்தில் இதற்குக் கூறப் பெறும் தத்துவம் அற்புதமானது. தோழிப் பாசுரம், தாய்ப் பாசுரம், மகள் பாசுரம் எனப் பாசுரங்கள் அடிைந்திருப்பதற்குக் கூறப் தத்துவக் கருத்துக்கள் சிந்தயைக் கவர்பவை.