பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருளிச் செயல்கள் 343


 (!) புலியூர் அம்புலவர்க்குற்ற

     பத்தியர் போலப் பணைத்திரு
        மாந்த பயோதரத்தோர் 
     பித்திதற் பின்வர முன்வரு
        மோவார் பெருந்தகையே (242) 

(பத்தியர் - பத்தியையுடையார்; பித்தி - பேதை: பயோதரம் -முலை)

இத்திருப் பாடலில் பத்தியராகிய அடியார்களைத் தலைவிக்கும், அம்பலவனைத் தலைவனுக்கும் அடிகள் உவமித்துக் கூறியிருத்தல் நோக்கததக்கது. (2) புலியூர்

     ஒருவனது அன்பரின் இன்பக்
        கலவிகள் உள்ளுருகத் 
     தருவது செய்தென தாவிகொண்டேகி
        யென்நெஞ்சிற் றம்மை 
     இருவின காதலர் ஏதுசெய்வான்
        இன்று இருக்கின்றதே (281) 

இத்திருப்பாடலில் தலைமகள் தன்னை அடியவரோடும் தன் காதலனாகிய தலைவனை இறைவனோடும் உவமித் துரைப்பதாக அடிகள் கூறியுள்ள திறம் நோக்கத் தககது.

இந்தத் தெய்வப் பனுவலில் இறைவன் இயல்புகளை விரித்துரைத்துப் போற்றுவனவாக அமைந்த தொடர்கள் யாவும் அறிவானூற் பொருள் பற்றியனவாகவும், தலைவன் தலைவி தோழி பாங்கன், செவிலி முதலியோர் இயல்புரைப்பனவாக அமைந்த தொடர்கள் யாவும் உலக நூற்பொருள் பற்றியனவாகவும் பகுத்துணர்ந்தால்தான் இப்பனுவல் நுவலும் பொருளை உணர்ந்து அநுபவிப்பதற்குத் துணையாக இருப்பது நன்கு புலனாகும். திருக்கோவையாரின் சிறப்பைப்பற்றி,