பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருளிச் செயல்களில் அடிகள் 321



நிகழ்ச்சியை அடிகள் குறிப்பிடுவதைக் காணலாம். இங்ஙனம் அடிகளே கூறுவதால், வாதவூரில் அவர் பிறப்பதற்கு முன்பு சிவபிரானோடு கலந்திருந்து அவன் புகழை மறவாது இன்புற்றிருந்தார் என்பதும், மண்ணுலகில் ஊனுடம்பில் புகுந்து அவர் பிறந்த பின்பு உலகவர் சார்பால் பல துன்பங்கள் உற்று வருந்தினர் என்பதும், சிவபெருமான் குருவாக எழுந்தருளித் தன் நோக்காலும் வாக்காலும் திருத்தித் திருவடி சூட்டி அவரை ஞானஒளிவீசும் சோதி வடிவினராக்கினார் என்பதும் நமக்கு நன்கு புலனாகின்றன. சோதி வடிவினராக்கின நிகழ்ச்சி,

  ஈறி லாதநீ  எளியை யாகிவக்
     தொளிசெய் மானுட மாக கோக்கியும் (85) 

என்று திருச்சதகத்தில் குறிப்பிடுதல் கண்டு மகிழலாம்.

பாண்டியன் தொடர்பு : மாணிக்கவாசகர் பாண்டிய மன்னன் பால் அமைச்சுரிமை பூண்டொழுகிய நிகழ்ச்சியை எல்லாப் புராணங்களுமே தெளிவாக விளக்குகின்றன.

  ஈண்டிய மாயா இருள்கெட
     எப்பொரு ளும்விளங்கத் 
  தூண்டிய சோதியை மீனவ
     னுஞ்சொல்ல வல்லனல்லன்  (529) 

(எப்பொருளும் . உயிரும் மனமும் இறையொளியும் ஆகிய எல்லாப் பொருளும்; மீனவன் - பாண்டியன்)

என்ற திருப்பாண்டிப் பதிகப் பாடலாலும்,

  மதுரையர் மன்னன் மறுபிறப்
     போட மறித்திடுமே (525) 

என்ற பாண்டிப்பதிகத் தொடராலும் அறிய முடிகின்றது.

  நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமல்
     பரகதி பாண்டியற் கருளினை போற்றி'
                                    -போற்றித்-214,15