பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324 மாணிக்கவாசகர்



  அந்தன னாகிவந் திங்கே
     அழகிய சேவடி காட்டி 
  எந்தம ராமிவ னென்றிங்
     கென்னையு மாட்கொண் டருளும் 
  செந்தழல் போற்றிடு மேனித்
     தேவர்பி ரான்வரக் கூவாய் (355)
                                -குயிற்-10 
  பாரிடைப் பாதங்கள் காட்டிப்
     பாசம றுத்தெனை யாண்ட 
  ஆருடையம்பொனின் மேனி
     அமுதினை வேரக் கூவாய். -க்ஷ.9 

என்ற குயிற்பாட்டுகளாலும் இச்செய்தி தெளிவாகும். மேலும்,

   செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்
      திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி 
   அந்தண னாவதும் காட்டிவந் தாண்டாய்
      ஆரமுதேயுள்ளி யெழுந்தரு ளாயே (373) 

என்ற திருப்பள்ளி எழுச்சிப் பாடலும்,

  பேராசை யாமிந்தப்
     பிண்டமாப் பெருந்துறையான் 
  சீரார் திருவடி
     யென்தலைமேல் வைத்தபிரான் (284)
                               -திருப்பூவ-10 

என்ற திருப்பூவல்விப் பாடற்பகுதியும்,

  மாய வாழ்க்கையை மெய்யென் றெண்ணி
     மதித்தி டாவகை நல்கினான்
  வேய தோளுமை பங்கனெங்கள்
     திருப்பெ ருந்துறை மேவினான்