பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326 மானிக்கவாசகர்



என்ற அச்சோபதிகத் திருப்பாடல் பகுதியும் தெளிவாக்கி யுள்ளன. திருப்பெருந்துறையில் அடிகளுக்கு ஆசிரியத் திருமேனி கொண்டு உபதேசித்தது திருவைந்தெழுத்து என்று நம்பி தம் திருவிளையாடலில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடிகளின்

  நமச்சிவாய வாஅழ்க
     நாதன்தாள் வாழ்க
                       -சிவபு. அடி. 1     எனவும்,
  நானேயோ தவஞ்செய்தேன்
     சிவாயநம எனப்பெற்றேன் (553)
                      -திருவேசற. 10 எனவும்,
  என்னையோர் வார்த்தையுட்
     படுத்துப் பற்றினாய்                    எனவும்,
 
     ஓங்காரத் துட்பொருளை 
  ஐயனெனக் கருளியவா
     றார்பெறுவார் அச்சோவே (65:4)
                             -அச்சோ-7 எனவும,
  அஞ்செழுத்தின் புணைபிடித்துக்
                           -திருச்சத. 27

எனவும் வரும் திருவாசகப் பாடற்பகுதிகள் திருவைந்தெழுத்துபதேசத்தின் சிறப்பினை வற்புறுத்தலைத் தெளியலாம். இருவினைகளால் நேரிடும் இன்பதுன்பங்கள் இரண்டையும் ஒருபடித்தாக எண்ணி-அதாவது இன்பத்தில் விருப்பமும் துன்பதில் வெறுப்பும் கொள்ளாது இரண்டையும் சமமாக எண்ணி-பழகும் நிலையே இரு வினையொப்பு.