பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328. மாணிக்கவாசகர்



  ஈறி லாதநீ எளியை யாகிவந்து
     ஒளிசெய் மானுட மாக நோக்கியும் 
  கீறி லாத நெஞ்சுடையவனாயினேன் (95)
                                 -திருச்சத.91 
           (கிறிலாத - பதிவு இலாத.) 

என் இறைவனை நோக்கி அடிகள் உளமுருகிப் போற்றுதலால் இனிது தெளியலாம். தேவரும் காணாச் சிவபெருமான் இப்புவியிசைத் தம் கண்காண எழுந்தருளிவந்து தம்மை ஆட்கொண்டருளிய அருட்செயலை,

  தேவரும் அறியாச் சிவனே காண்க 
  பெண்ஆண் அலியெனும் பெற்றியன் காண்க 
  கண்ணா லியானும் கண்டேன் காண்க   
         *    *     *    *      *
  புவனியிற் சேவடி தீண்டினன் காண்க 
  சிவனென யானும் தேறினன் காண்க 
  அவனெனை யாட்கொண் டருளினன் காண்க. (3)
                       - திருவண்ட 56-58; 61.53 

எனவும்,

  அருபரத் தொருவன் அவனியில் வந்து 
  குருபர னாகி அருளிய பெருமையை (4)
                           -போற்றித் 75-76 

எனவும் வரும் திருவாசகப் பகுதிகளில் அடிகள் தெளிவாகக் குறித்துப் போற்றியுள்ளதைக் கண்டு மகிழலாம்.

மணிவாசகப் பெருமானுக்கு இறைவன் ஞானோபதேசம் செய்த முறையைப் பிற்காலத்தில் விரிந்து பரவிய சைவசமய தீக்கை முறைகளில் 4 நிர்வாண தீக்கை முறைக்கு ஒத்தவாறு கடவுள் மாமுனிவர் விரித்துக் கூறுவர். நம்பிதிருவிளை யாடலில் இம்முறை விரிவாகக் கூறப்பெறவில்லை. இங்கு


4. சுப்புரெட்டியார், ந: சைவசமய விளக்கு பக் 316-323.