பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330 மாணிக்கவாசகர்



  எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவ 
  துள்ளம் கொண்டோ ருருச்செய் தாங்கெனக் 
  கள்ளு ராக்கை யமைத்தனன் ஒள்ளிய 
  கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை 
  என்னையும் இருப்ப தாக்கினன் (3) -
                         -திருவண் (170-179)

(தேக்கிட - நிறைய; ஊன் - தசை; குரம்பை - குடிசை; எற்பு - எலும்பு; கன்னல் - கரும்பு.)

என வரும் திருவண்டப் பகுதியாலும் தெளிவுறுத்தப் பெற்றிருப்பதைக் கண்டு மகிழலாம்.

சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் பெற்ற மணிவாசகப் பெருமான் இறைவன் பேரருளை நினைந்து சிவபோகமாகிய பெருந்தேனை நுகர்ந்து, சுற்றத் தொடர்புகளையெல்லாம் முற்றிலும் தொடர்ந்து, பற்றற்றான் பற்றினை மட்டிலும் கொண்டு சித்தம் சிவமாகத் திகழ்ந்த நிலையை நாம் அறிவோம். அடிகளது இந்த அநுபவ நிலை பல பாடல்களில் நிழலிடுகின்றன. இவற்றைக் காண்போம்.

  நனவேஎனைப்பிடித் தாட்கொண்டவா
     நயந்து நெஞ்சம் 
 சினவேற்கண் நீர் மல்கத்
    தெள்ளேணம் கொட்டாமோ (244)
                           -திருத்தெள்-10 
     (நனவு - விழிப்புநிலை; சின - சின்ன)
  கயல்மாண்ட கண்ணிதன்
        பங்கனெனைக் கலந்தாண்டலுமே
  அயன்மாண் டருவினைச்
     சுற்றமும் மாண் டவனியின்மேல்