பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்களில் அடிகள் 337 வாத ஆரினில் வந்தினி தருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பரிசும் - கீர்த்தித். 52-53 என வரும் திருவாககத் தொடரால் அறியப்படும். திருப் பெருந்துறையில் இறைவனால் ஆட்கொள்ளப்பெற்ற நிலையில் அப்பெருமானை நினைந்து மகிழும் பாங்கில் அவனது திருவடிச் சிலம்பொலியைக் கேட்டு மகிழும் சிவாநுபவ இன்பத்தில் பலகாலும் திளைத்திருப்பார். இச் செய்தி, சீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பொலிக்கே ஆராத ஆசையதாய் அடியேன் அகமகிழத் தேரர்ந்த வீதிப் பெருந்துறையான் திருநடஞ்செய் பேரானந் தம்பாடிப் பூவல்லி கொய்யாமோ (292) -திருப்பூவல்லி=18 எனவரும் திருப்பூவல்லியில் அடிகளது அநுபவ மொழியால் புலனாகும். பரிமேலழகன் காட்சி: அடிகள் தம்பொருட்டு இறைவன் பரிமேலழகனாக மதுரை நகரத்தே வந்து தோன்றிய எளிமைத் திறத்தையும், அப்பெருமானது திருமேனிப் பொலிவையும், அந்த எழில் மிக்க தெய்வத் திருக்காட்சி யைப் பாண்டியனும் தாமும் மதுரை மாநகரப் பெரு மக்களும் கண்டு உளமுருகப் பெற்ற செய்தி அடிகளின் திருவாக்கினாலேயே அறியக் கிடக்கின்றது. wom-22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/355&oldid=864471" இலிருந்து மீள்விக்கப்பட்டது