பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்களில் அடிகள் 339 விரவிய தீவினை மேலைப் பிறப்புமுங் நீர்கடக்கப் பரவிய அன்பரை யென்புருக் கும்பரம் பாண்டியனார் புரவியின் மேல்வரப் புந்திகொ ளப்பட்ட பூங்கொடியார் மரவியன் மேல் கொண்டு தம்மையுங் தாமறி யார்மறந்தே (532) (விரவிய - கலந்த; பிறப்பு முந்நீர் - பிறவிக்கடல்; மர இயல். மரத்தின்தன்மை) எனவரும் திருப்பாண்டிப் பதிகப் பாடல்களாலும் விரித்துக் கூறிய திறம் பன்முறை படித்து இன்புறத்தக்கது. பரிமேல் எழுந்தருளிய பாண்டியனாரை மீனவன் இறைவனே என்ற உண்மையைச் சிறிதும் உணரப்பெற்றிலன். அவனுக்கு அத்தகைய பக்குவம் ஏற்படவில்லை. இதனை, ஈண்டிய மாயா இருள்கெட எப்பொரு ளும்விளங்கத் தூண்டிய சோதியை மீனவ னுஞ்சொல்ல வல்லனல்லன் (కొల్ల |மீனவன்- பாண்டியன்! என்ற பாண்டிப்பதிக மற்றொரு பாடற் பகுதியால் இனிது தெளியலாம் மண்சுமந்த திருவிளையாடல்: நரி - பரி, பரி - நரி ஆன திருவிளையாடல்கட்குப் பின்னர் அரச தண்டனையை அநுபவிக்கும் அடிகள் பொருட்டு பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்கின்றது, சுடுமணலில் நிறுத்தப் பெற்றுத் தண்டனையை நீக்கும்பொருட்டு இறைவன் வையையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடச் செய்கின்றான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/357&oldid=864475" இலிருந்து மீள்விக்கப்பட்டது