பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 மாணிக்கவாசகர் மன்னனது அதிகாரிகளால் தனக்கு வரையறுக்கப்பெற்ற பங்கினை அடைத்தற்கு ஆள்கிடைக்காது அல்லற்பட்டழுத் வந்தி என்னும் தவமுதியாள்பொருட்டுக் கூலியாளாகத் தோன்றியதும், மண் சுமந்ததும், பாண்டியனால் பிரம்படி பட்டதுமான நிகழ்ச்சிகள், ஆங்கது தன்னில் அடியவட் காகப் பாங்காய் மண்சுமந் தருளிய பரிசும் & -கீர்த்தித் (45.47) எனவும, பிட்டு நேர்பட மண்சு மந்த பெருந்து றைப்பெரும் பித்தனே (467) -திருக்கழுக்-2 எனவும், திண்போர் விடையான் சிவபுரத்தார் போரேறு மண்பால் மதுரையில் பிட்டமுது செய்தருளித் தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட புண்பால் பாடிகாம் பூவல்லி கொய்யாமோ (290) s -திருப்பூவல்லி-16 எனவும், கண்சுமந்த கெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூலிகொண் டக்கோவான் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய் (182) -திருவம். 3 எனவும் வரும் திருவாசகத் தொடர்களாலும் பாடல் களாலும் அடிகளால் குறிப்பிடப்பெறுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/358&oldid=864477" இலிருந்து மீள்விக்கப்பட்டது