பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 மாணிக்கவாசகர்



இவருக்கும் அமைதியுண்டாகாது உண்மையுணரும் வேட்கை மிகுவதாகின்றது என்கின்றார் பரஞ்சோதியார்.(10) இந்நிலையில்,

   சாத்திரத்தை யோதினர்க்குச் சற்குருவின் தன்வசனம் 
   மாத்திரத்தே வாய்க்குகலம் வந்துறுமே-ஆர்த்த கடல் 
   தண்ணீர் குடித்தவர்க்குத் தாகம் தணிந்திடுமோ 
   தெண்ணீர்மையாய் இதனைச் செப்பு. 

என்ற திருக்களிற்றுப்படியாரின் செய்யுள் நினைவுக்கு வருகின்றது.


குதிரைகள் வாங்கச் செல்லல் :

ஒரு நாள் பாண்டியன் அவையில் வீற்றிருக்கும்பொழுது குதிரைத் துறைக் காவலர்கள் சிலர் வந்து அரசனைப் பணிந்து நின்று, அரசர் ஏறே, நம் சேனையைச் சேர்ந்த குதிரைகளில் பெரும்பாலானவை பல நோய்களால் மரித்துப் போயின. எஞ்சியுள்ள சிலவும் மெலிவுற்று இறக்கும் நிலையிலுள்ளன. நம் குதிரைப் படையில் ஒரு நூறாயிரம் குதிரைகளேனும் இருத்தல் இன்றியமை யாதது” எனத் தெரிவிக்கின்றனர். அரசனும் தென்னவன் பிரமராயரை நோக்கி, 'அமைச்சர் தலைவரே, நம் குதிரைத் துறைப் பொறுப்பாளர்கள் குதிரைகள் யாவும் நோயால் இறந்து பட்டவனாகக் கூறிச் சென்றனர். குதிரை இலாயத்திலும குதிரைகள் மாறிப் பன்னெடு நாட்களாயின. திருப்பெருந்துறையில் குதிரைகள் ஈழத்து வழியாக வந்திறங்கி இருப்பதாகத் தூதுவன் கூறுகின்றான். நீரோ உத்தம இலக்கணம் பொருந்திய குதிரைகளை வாங்குவதில் சதுரர் என்பதை நான் அறிவேன். நம் அரசுக் கருவூலத்தில் வேண்டுமளவு பொருள்களை எடுத்துக் கொண்டு குதிரைகள் வந்திறங்கும் இடம் சென்று சிறந்த குதிரைகளை வாங்கிக் கொணர்வீர்களாக" எனப் பணிக்கின்றான்.


10. வாத ஆரடிகளுக்கு- 16.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/36&oldid=1012194" இலிருந்து மீள்விக்கப்பட்டது