பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்களில் அடிகள் 343 (ஊரேறு - ஆள்வாரில்லாத ஊர்க்காளை) எனவும், பொருத்த மின்மையேன் பொய்ம்மை யுண்மையேன் போத வென்றெனைப் புரிந்து நோக்கவும் வருத்த மின்மையேன் வஞ்ச முண்மையேன் மாண்டி லேன்மலர்க் கமல பாதனே அரத்த மேனியாய் அருள்செ யன்பரும் நீயும் அங்கெழுக் தருளி யிங்கெனை இருத்தி னாய்முறை யோவெ னெம்பிரான் வம்பு னேன்வினைக் கிறுதி யில்லையே (97) -திருச்சத (93). (பொருத்தம் - தகுதி: போத - வருக, அரத்தம் - சிவப்பு வம்பனேன் -iணன்) எனவும் இறைவனை நோக்கி முறையிடுமுகமாக அடிகள் விரித்துரைத்த திறம் ஈண்டு நினைக்கத் தக்கது. இந்நிலையில் பாடப் பெற்ற பனுவல்தான் திருச்சதகம்’ என்பது தெளி வுடன் துணியப்படும். பிற தலங்கள்; மணிவாசகப் பெருமான் பெருந்துறை யிலிருந்து திருவுத்தரகோச மங்கையை அடைந்து நீத்தல் விண்ணப்பம் பாடி பெருந்துறையில் கண்ட காட்சியையே இங்கும் கண்டனர் என்பதற்கு அகச் சான்று உண்டு. தெங்குலவு சோலை திருவுத்தர கோசமங்கை தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான் பங்குலவு கோதையும் தானும் பணிகொண்ட கொங்குலவு கொன்றைச் சடையான் (335) -திருப்பொன்-9 (தெங்கு - தென்னை; எந்தரமும் - எந்த நிலையிலும் பங்கு பாதி; கொங்கு - தேன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/361&oldid=864484" இலிருந்து மீள்விக்கப்பட்டது