பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 மாணிக்கவாசகர். என்ற திருப்பொன்னூசல் பகுதியால் இனிது புலனாகும், பின்னர் மணிவாசகப் பெருமான் பல தலங்களையும் வணங்கித் திருவிடை மருதூர் ஈசனைச் சிறப்பாக வழிபட்ட செய்தி, இடைமரு ததனில் ஈண்ட விருந்து படிமப் பாதம் வைத்தவப் பரிசும் -கீர்த்தி 75-76 என்பதனாலும், அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த பொங்தைப் பரவிகாம் பூவல்லி கொய்யாமோ (276) -திருப்பூவல்-2 என்ற திருப்பூவல்லிப் பாடற் பகுதியாலும் உறுதிப்படு கின்றது. அடுத்து, திருவாரூர் என்ற திருத்தலத்துக்கு வந்து 'திருப்புலம்பல் அருளிச் செய்தார் என்பது கடவுண் மாமுனிவர் குறிப்பு. இது, பூங்கமலத் தயனொடுமால் அறியாத நெறியானே கோங்கலர் சேர் குவிமுலையாள் கூறாவெண் ணிறாடி ஒங்கெயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேனின் பூங்கழல்கள் அவையல்லா தெவையாதும் புகழேனே. (554) |கோங்கலர் - கோங்கம்பூ; எயில் மதில்: யாதும் - ஒரு சிறிதும்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/362&oldid=864486" இலிருந்து மீள்விக்கப்பட்டது