பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்களில் அடிகள் 343 என்ற அப்பதிக முதற் பாடலால் தெளிவாகும். பின்னர் சீகாழிப் பதியை அடைந்து தமக்கு வெளிப்பட்டருளிய கோழித் துரையின் திருவடிகளை இறுகப் பற்றிக் கொண்டு "பிடித்த பத்தினைப் பாடினார் என்பது திருவாதவூரர் புராணக் குறிப்பு’’ இதில் பாடல்தோறும் ‘உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவதினியே’’ என்று இறைவனை நோக்கி வினவும் குறிப்பும், “கழுமல மதனில் காட்சி கொடுத்தும்' என வரும் கீர்த்தித் திருவகவல் தொடரும் கடவுண் மாமுனிவரின் குறிப்பை அரண் செய்கின்றன. பின்னர்க் குறிப்பிட்ட அடி முற்காலத்தில் ஆளுடைய பிள்ளையாருக்கு தோணிபுரத்தீசர் அம்மையப்பராகத் தோன்றிய அருட் காட்சியையும் குறிப்பிடுவதைக் கண்டு மகிழ்கின்றோம். இறைவன் பணித்த வண்ணம் மணிவாசகபமபருமான் கழுக்குன்றம் வந்து கழுக்குன்ற நாதனை வணங்கி மகிழ்ந்த செய்தி, மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி மலங்கெடுத்தபெ ருந்துறை விலங்கி னேன்வினைக் கேட னேணினி மேல்வி ளைவத றிந்திலேன் இலங்கு கின்றதின் சேவ டிகளி ரண்டும் வைப்பிட மின்றியே (468) -திருக்கழுக். 3 (மலங்கினேன் - கலங்கினேன்; விலங்கினேன் - விலகி கினேன்) 7. பிடித்த பத்து (37) காண்க. 8. கீர்த்தித்-அடி 88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/363&oldid=864488" இலிருந்து மீள்விக்கப்பட்டது