பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 மாணிக்கவாசகர் மிண்டிய மாயா வாதம் என்னும் சண்ட மாருதம் சுழித்தடித் தாஅர்த்து உலோகா யதமெனும் ஒண்டிறல் பாம்பின் கலாயே தத்த கடுவிடம் எய்தி -போற்றி, 54-57 (மிண்டிய வலிய கலாபேதத்த காமக் கலையின் பேதங்களாகிற கொடிய பாம்பு] என்ற போற்றித் திருவகவல் பகுதியால் தெளியலாம், ஆணவ மலத்தின் இயல்பு : உயிர்களின் அகத்தே மறைத்து நிற்கும் மலமும் அவ்வுயிர்களின் புறத்தே மறைத்து நிற்கும் இருளும் ஆணவ மலத்தின் இருவேறு திறங்கள். ஒருவிதத்தில் ஆணவம் இருளை ஒத்திருப்பினும், இன்னொரு விதத்தில் ஆணவம் இருளை விடக் கொடியது. இருள் தன்னிடத்திலுள்ள பொருளை மறைக்கும்; தன்னை மறைக் காது. ஆனால் ஆணவம் தன் செயலை மறைப்பது மட்டு மின்றித் தன்னையும் மறைத்துக் கொள்ளும். இருளில் மறைந்து கிடக்கும் பொருள்கள் நம் கண்ணுக்குப் புலனாகா விடினும், அவற்றை மறைத்துக் கொண்டிருக்கும் இருளாவது நமக்குப் புலனாகும், ஆணவம் நம் அறிவை மறைக்கின்றது. அதேசமயம் தன்னையும் மறைத்துத் தன்செயலையும் மறைக்கின்றது. இருள் வெளிப்பட்டுத் தன்னைக் காட்டிக் கொண்டே தனது செயலைப் புரிகின்றது. ஆனால் ஆணவம் வெளிப்பாடாமல் தன்னை மறைத்துக் கொண்டே தனது தொழிலைச் செய்கின்றது. ஒருபொருளும் காட்டாது இருஉருவம் காட்டும் இருபொருளும் காட்டாது இது (திருவருட் பயன்-இருள் மலநிலை-3) எனவும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/368&oldid=864494" இலிருந்து மீள்விக்கப்பட்டது