பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிவாசகரின் சிவநெறிக் கொள்கை 353 முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான் பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன் (618) - திருவெண்பா - 4 எனவும், வரும் திருவாசகத் தொடர்களால் தெளியலாம். சிவத்தின் இயல்பு : ஆருயிர்களைப் பற்றியுள்ள மலத்தின் இயல்பினைக் கூறும் அடிகள் அம்மலத்தின் ஆற்றலைக் கெடுத்து உயிர்களை உய்வித்தருளும் சிவத்தின் இயல்பினை யும் செப்புவார். 'அஞ்ஞானந்தன்னை அகல்விக்கும் நல்லறிவு (சிவபு -40) எனவும், மலம் அறுத்து வான்கருணை தந்தானை'(கண்ட 9) எனவும், மலம் அறுத்து என் உடலும் எனது உயிரும், புகுந்து, ஒழியா வண்ணம் நிறைந்தான்’ எனவும், கழிவில் கருணை (531) எனவும், கருணைக்கடல்' (117, 223) எனவும், பருகற்கினிய பரங்கருணைத் தடங்கடல்" (249), பழம் பொருள் (163, 540,) எனவும், அவன் தில்லை யின்ஒளி (திருக்கோ 106) எனவும் வரும் திருவாசகக் தொடர் களில் அடிகள் உடன் வைத்து உணர்த்தியுள்ளார். பழம் பொருளாகிய சிவம் என்றும் நல்லறிவுப் பொருளாகத் திகழ்தலும், மலம் நீங்கிய உயிர் தன் பொருட்டன்மை சிதையாதிருக்க, அவ்வுயிரின்கண் சிவம் புலப்பட்டுத்தோன்றி அதன் உடல், கருவிகரணங்களை அகத்திட்டு விளங்குதலும் இக்காட்டிய திருவாசகத் தொடர்களால் புலனாகும். மேலும், பேரருளாளனாகிய இறைவன் உயிர்களின் மலத் துன்பத்தை நீக்கித்தன் பேரருள் இன்பத்தை உயிர்கட்கு வழங்கும் அருட் குறிப்பு உடையனாதலும், அம்முதல்வன் தன்பால் அன்புடைய அடியார்கட்கு அருள் வழங்குதற் பொருட்டுத் தில்லைச் சிற்றம்பலமாகிய அருள் வெளியில் ஒளியுருவினனாக நின்று ஆடல் புரிதலும் இவற்றால் தெளிவாகின்றன. . шоғr~~23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/371&oldid=864498" இலிருந்து மீள்விக்கப்பட்டது