பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிவாசகரின் சிவநெறிக் கொள்கை 355 கூடியது.இதற்குமேல் உள்ள ஆணவம் என்பதை உணர்தல் மிகவும் அரிது. ஆணவம் நுண்பொருள்; கன்மம், ஆணவம் மாயை ஆகிய இரண்டற்கும் இடைப்பட்ட பொருள். ஆணவமலத்தால் அறியாமையும் மாயை கன்மங்களால் அவ்வறியாமை நீங்கி அறிவு விளங்கப்பெறுதலும் உயிர்கள் பால் இடையறாது நிகழ்ந்து கொண்டே இருக்கும். இவற்றுள் ஆணவமலம் ஒன்றே செம்பில் களிம்புபோன்று உயிரோடு ஒற்றித்து அதன் விழைவு அறிவு செயல் ஆகிய ஆற்றல்களைத் தொன்றுதொட்டு மறைத்து நிற்பது. இம்மலம் சகசமலம் (சகசம் - கூடப்பிறந்தது) என்றும், 'அநாதி செயற்கை என்றும் வழங்கப்பெறும். அறியாமையே வடிவமாய் நிற்றலின் இது இருள் மலம்’ என்றும் பெயர் பெறும், மாயையும் கன்மமும் ஆணவமல நீக்கத்திற்கும் உயிர் களின் அறிவு விளக்கத்திற்கும் துணைசெய்வனவாய், இறை வனால் கூட்டப்பெற்று இடையே ஒரு காலத்து வந்து சேர்ந் தனவாகும், மலநீக்கத்திற்கு உதவி செய்யவந்தஇவ்விரண்டும் ஆணவமலத்தோடு உடன் நின்று அதன் சார்பில் தாமும் ஒரோ வொருகால் மயக்கத்தை விளைத்தல் பற்றி மலம் என்று வழங்கப் பெறுகின்றன. அறியாமையை விளைவிக்கும் ஆணவ மலத்தின் வலியை யொடுக்கி உயிர்கட்கு அறிவு விளங்கச் செய்தற் பொருட்டே எல்லாம் வல்ல இறைவன் மாயையின் காரியமாகிய பல்வேறு உடம்புகள், அவை உறைவதற்கேற்ற பல்வேறு உலகங்கள், அவை நுகர் தற்கேற்ற நுகர் பொருள்கள் ஆகியவற்றை மாயையாகிய முதற் பொருளினின்றும் படைத்து வழங்கு கின்றான். அருட்பெருங் கடலாகிய இறைவன் உயிர்கள் உலக நுகர்ச்சிகளால் நன்றும் தீதும் கண்டு அறிவு விளங்கப் பெற்றுத் தம்மைப் பிணித்துள்ள மும்மலங்கள் கழன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/373&oldid=864500" இலிருந்து மீள்விக்கப்பட்டது