பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிவாசகரின் சிவநெறிக் கொள்கை 357 செய்யாமல் தற்போதம் கெட்டு அந்தச் சிவத்தோடு கூடி இரண்டற நின்று (அத்துவிதமாய்) அநுபவித்தது என அறிக’’ என்பர் மதுரைச் சிவப்பிரகாசர். ஆன்மா, தன் பொருட்டன்மை அழிந்து சிவம் ஒன்றாயே ஒழியாமலும், சிவத்தின் வேறாய்த் தான் தனித்து நில்லா மலும், பாலோடு அளாவிய நீர் தன் உண்மை கெடாமல் பாலின் தன்மையதாய் அதனுடன் பிரிவறக் கலந்து ஒன்றாக இருக்குமாப்போலே, மலம் நீங்கித் தூயதாகித் தன் உண்மை கெடாமல் சிவத்துடன் இரண்டறக் கலந்து ஒன்றாதலையே. 'சிவமாதல்’ எனச் சித்தாந்த நூல்கள் கூறும், சிவத்தின் திருவடியைச் சேர்தல் என்பது, இறைவன் திருவருளில் பதிதல். இதனைச் சிவமாதல்’ என வழங்குதல் திருமூலர் காலந்தொட்டு வழங்கி வரும் சித்தாந்த வழக்காகும் இவ்வுண்மை, ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக கின்று சமய கிராகாரம் நீங்கியே கின்று பராயரை நேயத்தைப் பாதத்தால் சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே (1437) என்ற திருமூலர் வாய்மொழியால் தெளிவாகும். மேலும், இக்கருத்தைத் தெளிவாக்குவேன். ஆதித்தன் ஒளியைக் கொண்டு கண் பிரபஞ்சத்தைப் பற்றி நிற்கின்றது. அப்பொழுது கண் அந்த உருவங்களை விட்டு அந்த ஒளிக்கு முதலாயிருக்கின்ற ஆதித்தனைக் கண்டு பிரிவற நிற்கின்றது, அதுபோல ஆன்மாவும் அருளிடமாகக்கூடி நின்று சத்தாதி விடயங்களைப் புசித்து நின்றாலும்,அதனையும்விட்டு மனோ விகாரமும் அடங்கி அந்த அருளுக்கு முதலாயிருக்கின்ற சிவத்தோடும் அந்த அருளை வழியாகக் கொண்டு சென்று 2. சிவப்பிரகாசம் - 80ஆம் செய்யுள் உரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/375&oldid=864502" இலிருந்து மீள்விக்கப்பட்டது