பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிவாசகரின் சிவநெறிக் கொள்கை 359 வண்ணமாதல்’ என்பதாகும். சிவமாவதென்பது சிவமாம் பெருவாழ்வு நுகர்வதாம் என்பதாம். ஆருயிர் சிவன் திருவடிக்கண் வைத்த அன்பினால் இறவாத இன்பம் நுகரும், அப்பொழுது அவ்வுயிரை அன்பி என்றும், இன்பூட்டும் சிவனை இன்பி என்றும் கூறுவர். இந்நிலையே சிவமாவதென்பதாம். அதுவன்றி உயிரழிந்து சிவமாதல் என்பதன்று. கோலம் பூண்டார் கோலப் பொலிவினராய் முழுவதும் காணப்பெறுவர். ஆயினும் கோலம் மட்டும் இருப்ப, அவர் அழிந்தனர் என்று கருதுவது ஏலாதன்றே? அதுபோல சிவன் திருவடியைச் சார்ந்தோர் சிவன் நிறைவில் அடங்கிச் சிவனாய்த் திகழ்வர். அதுவன்றிச் சிவமழிந்து உயிராகாது. இவ்வுண்மை சிவஞானபோதம் (சூத்திரம்-11), சித்தியார் (11-2-5) என்பவற்றாலும் அறியலாம். இங்ங்னம் மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவாசகப் பனுவலில் சைவ சித்தாந்தப் பொருள்கள் தெளிவாக விளக்கப் பெற்றிருத்தல் காணலாம். அத்துவிதக் கருத்து : இறைவன் உ ல கத் தோ டு கொண்டுள்ள தொடர்பை 'அத்துவிதம்' என்பர் சித் தாந்திகள். அத்துவிதமாவது இரண்டல்லாமை (அதாவது பிரிவின்மை) என்பது மெய்கண்டார் தரும் விளக்கம். அத்துவிதம் என்ற சொல்லே அந்நிய நாத்தியை (பிரிப் பின்மையை) உணர்த்துமாயிற்று.” என்று உரைத் தருளினமையால் உணரலாம்." பிரிவின்மை’ எனவே, 'பொருள் இரண்டு என்பதும் இரண்டாயினும் வேறு வேறாய் நில்லாது ஒன்றியே நிற்கும் என்பதும் பெறப்படும். அத்துவிதத் தொடர்பில் அபேதம், பேதம், பேதா பேதம் என்கின்ற மூன்று தன்மையும் ஒருங்கு காணப்படுகின்றது. 3. சி. ஞா. போ. 2-ஆம் சூத்திரம் முதலதிகரணம் வார்த்திகம் (7 - b) - சிறறுரை காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/377&oldid=864504" இலிருந்து மீள்விக்கப்பட்டது