பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிவாசகரின் சிவநெறிக் கொள்கை 361 உலகே ழெனத் திசை பத்தெனத்தா னொருவனுமே பலவாகி கின்றவா தோணோக்கம் ஆடாமோ (317) தி ருத்தோ. 5 (பகலோன் - சூரியன்: புலனாய மைந்தன் - அறிவு உடையவனாகிய இயமானன் அல்லது ஆன்மா; திசைபத்து - நேர்த்திசை 4, கோணத்திசை 4: மண்ணும் விண்ணுமாகிய 2 ஆகப் பத்து). இதில் இறைவனது அட்ட மூர்த்த சொரூபம் பேசப்படு கின்றது. அதாவது இறைவன் ஐம்பூதங்கள், ஞாயிறு, திங்கள், ஆன்மா எல்லாப் பொருள்களிலும் கலந்து விளங்கும் திறத்தினை அடிகள் விளக்குகின்றார். இறைவன் இவ்வாறு பொருள்தோறும் யாண்டும் நீக்கமறக் கலந்து உடனாய் நிற்கும் இயல்பினைக் கூறுவது இத்திருப்பாடல். இதில் தான் ஒருவனுமே பலவாகி நின்றவா’ என்பது இப்பாடலின் இதயம் போன்றது. 'இறைவனையன்றி வேறொரு பொருளும் இல்லாதிருக்க, அவன் ஒருவனே உலகுயிர் களாகிய பல பொருள்களாகக் காணப்படுகின்றான்’ எனச் சிலர் இதற்குப் பொருள் கூறுவது தவறு; அடிகளாரின் கருத்துக்கு இப்பொருள் சிறிதும் பொருந்தாது. ஒரு பொருளே பல பொருளாகத் தோற்றுதலும், ஒரு பொருளே பல பொருள்களில் ஊடுருவி நிற்றலும் தம்முள் மாறுபட்ட இருவேறு தன்மைகள். இவற்றுள் அடிகள் குறித்தது இரண்டாவது பொருளே; அஃதாவது ஒரு பொருளே தம்முள் வேறுபட்ட பல பொருள்களிலும் இரண்டறக் கலந்து நிற்கும் இயல்பினையேயாகும். எண்வகையான் நின்றான் என்னாது 'எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்' எனத் தாம் கூறும் பொருள் தெளிவடைவதற்கே என்பது அறியத் தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/379&oldid=864506" இலிருந்து மீள்விக்கப்பட்டது