பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிவாசகரின் சிவநெறிக் கொள்கை 363 “பல” என்பதால் அவனல்லாத உலகுயிர்களும், 'ஆகி: என்பதால் அவற்றோடு அத்துவிதமாய்க் கலந்து விளங்கும் அவனது தன்மையும் புலப்படுத்தப் பெற்றுள்ளமை கண்டு தெளியத்தகுவதாகும். இக்கருத்தினை, கள்ளும் கீழுளும் மேலுளும் யாவுளும் எள்ளும் எண்ணெயும் போல்கின்ற எங்தையே (50) -திருச்சத. 46 (நள் - நடு; எள்ளும் எண்ணெயும் போல் என்றது எங்கும் . வியாபித்திருத்தலைக் குறித்து) என்ற திருச்சதகத் திருப்பாடலிலும் கண்டு மகிழலாம். அஞ்செழுத்தின் பெருமை : திருவாசகம் முழுதும் ஒதி உளம் கொண்டவர்கட்கு அஃது ஐந்தெழுத்துப் பெருமை கூற எழுந்த நூல் என்பதை நன்கு தெளிவர். நூல் தொடங்கும் பொழுதே நமச்சிவாய வாழ்க’ (சிவபுராணம்) என்று தொடங்குகின்றது. போற்றியோ கமச்சி வாய புயங்களே மயங்கு கின்றேன் போற்றியோ நமச்சி வாய புகலிடம் பிறிதொன் றில்லை போற்றியோ நமச்சி வாய புறமெனப் போக்கல் கண்டாய் போற்றியோ நமச்சி வாய சயசய போற்றி போற்றி (66) (போக்கல் - போக்காதே) போற்றி என்னும் செந்தமிழ்த் திருமறைக்குக் காத்தருள்க’ “வணக்கம்' என்ற இரு பொருளும் பொருந்துமிடம் நோக்கிக் கொள்ளப்படும். ஈண்டு இத்திருப்பாடல் ஐந்தெழுத்து மந்திரத்தைப் பாராட்டுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/381&oldid=864509" இலிருந்து மீள்விக்கப்பட்டது