பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 மானிக்கவாசகர் எண்ணி லேன்திரு காமவஞ் செழுத்துமென் ஏழைமை யதனாலே (431) (ஏழைமை - மடமை! என்றும், இப்பிறப்பினில் இணைமலர் கொய்துநான் இயல்பொடஞ் செழுத்தோதித் தப்பி லாதுபொற் கழல்களுக் கிடாதுகான் (573) (இணைமலர் - பொருத்தமான பூக்கள்) என்பவற்றால் தாம் அறியாமையினால் ஐந்தெழுத்து ஒதாமைக்கு இரங்குகின்றார். (ஒருவகையில் இது நைச்சியாறு சந்தானம்) நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநமஎனப் பெற்றேன் (553) (சிவாயநம - சூக்கும பஞ்சாக்கரம்) என் அநுபவ முதிர்ச்சிக்கண் சூக்கும பஞ்சாக்கரத்தை வியக்கின்றார். இன்னும் இந்நூல் ஐந்தெழுத்து மந்திரத்தை மறைவாகவும் சொல்லி நம்மை உய்யவைக்கின்றது. உடையாள் உன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் இேருத்தி அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பு தானால் அடியேனுன் அடியார் கடுவுள் இருக்கும் அரு ளைப்புரி யாய்பொன்னம்பலத்தெம் முடியா முதலே யென்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே (376) --கோயி. மூத். திருப். என்ற திருப்பாடலில் சிவயசிவ’ என ஆன்ம எழுத்தை இருமருங்கும் சிவசக்திகள் பாதுகாத்து நிற்க இருக்கும் "முக்தி பஞ்சாக்கரம் மொழியப்படுகின்றது. இதனை விளக்குவேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/382&oldid=864510" இலிருந்து மீள்விக்கப்பட்டது