பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிவாசகரின் சிவநெறிக் கொள்கை 365 நடராசர் நடனமாடுவதற்கு நம்நாட்டில் ஐந்து மன்று கள் உள்ளன. திருவாலங்காட்டிலுள்ளது மணி (இரத்தினம்) யாலானது; திருத்தில்லையிலிருப்பது பொன்னாலானது; திருக்கூடலி விருப்பது (மதுரை) வெள்ளியாலானது; திருநெல்வேலியி விருப்பது செம்பால் (தாமிரம்) ஆனது; திருக்குற்றாலத்திலிருப்பது ஒ வி யத் தா லா ன து. இந்த ஐந்தினையும் குறிக்கும் பொருண்மறை 'சிவயசிவ' என்று கூறுவர். இதில் இருபக்கமும் 'சிவ' என்னும் உடையானும், உடையாளுமாகிய இருவரும் நிற்ப 'ய'கரமாகிய ஆருயிர் நிற்கின்றமை புலனாகும். சிவயசிவ’ என்னும் திருவைந் தெழுத்து மீநுண்மையாகும். மீநுண்மை அதிகுக்குமம். அடியார்கள் உண்மையில் சிவ வண்ணமேயாகின்றனர். மெய்யடியார்கள் அகத்துத் திருவைந்தெழுத்தினை ஆராக் காதலுடன் உணர்விற்கணிப்பதால் உடையான் உடையாள் நடுவுள்ளாகின்றனர். புறத்துச் சிவனாரின் திருவலடயாள மாகிய திருவெண்ணிறும் சிவையின் திருவடையாளமாகிய சிவமணியும் பூணுதலால் அவ்விருவர்களின் நடுவிலிருக் கின்றனர். திருநீறும் சிவமணியும் உடலிடம் கொள்ளுவதே 'எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய் (395) என்பதன் மெய்ப்பொருளாகும். இன்னும் உடையாள் உன்றன் நடு இருக்கும்-அம்மை சிவமாகிய உனக்குள் எழுந்தருளியிருக்கும் என்றது ஐந்தொழில் ஆற்றலிலிருந்தும் நீங்கிப் புறப்பொருளை நோக்காது, அறிவே வடிவமாயிருக்கும் உண்மை நிலையில் சக்தி சிவத்தின் வசமாக இருப்பதை விளக்கியவாறு, உடையாள் நடுவுள் நீ இருத்தி அம்மையின் நடுவில் நீ இருக் கின்றாய் என்றது புறத்தை நோக்கி, உலகெல்லாமாய் வேறாய் உடனாய் நிற்கும் தடத்த நிலையில் சத்தியின் வசமாய்ச் சிவன் நிற்பதை விளக்கியவாறு. அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதனால் என்றது அருள்வயப்பட்டு நிற்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/383&oldid=864511" இலிருந்து மீள்விக்கப்பட்டது