பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 மாணிக்கவாசகர் அடியேன் மனத்து இருவரும் எழுந்தருள்வது ஆனால் என்றவாறு. இத்திருப்பாடல் இத்திருவாசக நூலுக்கு இதய மந்திரமாகப் பாராட்டப் பெறுவது. இதில் ஆன்மா இரு பக்கமும் சிவசக்திகள் பொருந்த 'சிவயசிவ’ என இருக்கும் இருதலை மாணிக்கம் விளக்கப் பெற்றுள்ளது. முடியாமுதல்சிறுஇல்லாத முதல்வன். இங்ங்ணம் எடுத்த இடங்கள் தோறும் ஐந்தெழுத்தின் பொருளும் அமைதியுமே காட்டிச் செல்வதை அறியலாம். சிவாநுபவம் : கதிரவன் எழுந்தவுடன் உலகவிருள் நீங்கி கண்ணறிவு விளங்கப் பெற்று எல்லாப் பொருள்களும் கண்ணுக்கு இலக்காகின்றன. அதுபோல் ஆன்மாவுக்கே இறைவனது அருளொளி தோன்றிய அளவில் அதனைப் பற்றியிருந்த ஆணவ இருள் அகன்று மறைய அவ் அருளொளி யின் துணையால் ஆன்மா தன்னையும் தன் முதல்வனையும் ஏனைய பொருள்களின் நிகழ்ச்சியினையும் உள்ளவாறு காணும் ஆற்றலைப் பெறுகின்றது. பளிங்கினில் விளங்கித் தோன்றிய மலர்களின் வடிவும் நிறமும் கதிரவன் வானின் உச்சியை அடையும்போது மெல்ல மெல்லக் குறைகின்றது; அஃது உச்சிக்கு வரும்போது முற்றிலும் இல்லையாய் ஒழிகின்றது. அதுபோல இறைவனது அருள்விளக்கம் ஆருயிரின்கண் பதியுந்தோறும் பதியுந்தோறும் முன் ஆன்மாவைப் பற்றியிருந்த மாயை கன்மங்களின் சார்பும் அணுவணுவாய்த் தேய்ந்து பின்னர் அவ்வருளொளி ஆன்மாவை முற்றிலும் கலந்த நிலையில் அவற்றின் பற்று ஆன்மாவை விட்டு முற்றிலும் இல்லையாய் ஒழிந்து போய் விடும். இவ்வாறு மாயை கன்மங்களின் சார்பு முற்றும் கெடச் சிவனொளியில் ஒன்றித்துக் காணும் தூய நல்லறிவின. ராகிய சிவஞானிகட்கு மெய்ப்பொருளாகிய சிவபரம் பொருளைத் தவிர உயிராகிய தம்மைப் பற்றிய உணர்வும், ஏனைய உலகப் பொருள்களும் தோன்றா தொழியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/384&oldid=864512" இலிருந்து மீள்விக்கப்பட்டது