பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிவாசகரின் சிவநெறிக் கொள்கை 367 இவ்வுண்மையினைச் சிவனருளில் திளைக்கும் திருவாதவூரடி கள் தாம் பெற்ற சிவாநுபவத்தில் வைத்துப் போற்றுகின்றார் ஒரு திருப்பாடலில். இன்றெனக் கருளி யிருள்கடிங் துள்ளத்(து) எழுகின்ற ஞாயிறே போன்று கின்றகின் தன்மை கினைப்பற கினைந்தேன் நீயலால் பிறிதுமற் றின்மை சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்தொன்றாம் திருப்பெருங் துறையுறை சிவனே ஒன்றும்நீ யல்லை அன்றியொன் றில்லை யாருன்னை அறியகிற் பாரே (392) -கோயில் திருப்.1 (கடிந்து - நீங்கி : உள்ளம் - ஆன்மா) என்பது பாடல். 'எளியேன் அகத்திருள் கடிதற்பொருட்டு என் உள்ளத்து வெளிப்பட்டுத் தோன்றியருளும் பேரறிவுக் கதிரே! புறத்திருள் கடியும் ஞாயிற்றினைப் போன்று அகத் திருள் கடிந்து நின்ற மெய்ப்பொருளே, நின் திருவருளால் அத்தன்மையினை வேறொரு நினைப்பின்றி அதுவே நினைப்பாக நின்று நினைந்தேன். நின்னுடைய நிலைக் களமும் நின்செறிவினுள் அடக்கமும் அல்லாத எப்பொருளை யும் எவரும் காணார் என்ற உண்மை புலனாயிற்று. அஃதாயுமிடத்து உன் இருப்பு மிகவும் துண்மையாதலால் ஆய்ந்த்ாய்ந்து செல்லச் செல்ல அணு அணுவாக துணுகி துணுகி ஒன்றாந் தன்மையினை உணர்ந்தேன். திருப்பெருந் துறையுறை சிவனே, அப்பொருள்களில் ஒன்றும் நீ இல்லை. அப்பொருள்களுள் ஒன்றும் உன் சார்பின்றித் தோன்றுவன அன்று. இந்நிலையில் உனது கலப்பு நிலையிலும் கடந்த நிலையிலும் நீ நிற்கும் அரிய நிலையினை நீயே நின்னருளால் உணர்த்தினாலன்றி யாவர் அறிய வல்லார்?' என்பது இப் பாடலின் பொருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/385&oldid=864513" இலிருந்து மீள்விக்கப்பட்டது