பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 - மானிக்கவாசகர் பொருள்களின் பருமை நுணுகி நுணுகி ஒடுங்கிச் செல்லுந்தோறும் அவற்றிற்கு இடங்கொடுத்து நிற்கும் சார்பும் நுணுக்கமாகவே அமையும். கரும்பின் பருமை எங்கணும் நிறைந்துள்ள சாறும் அக்காலத்துப் பருமை யாகவே நிறைந்து நிற்கும். அத்துடன் விரவி நிற்கும் இனிமைப் பண்பும் அச்சாது முழுதும் பரந்தே நிற்கும். பின்பு அச்சாறு பிழிந்தெடுக்குங்கால் பரப்பு துணுகிய நிலையினை எய்தும். அப்பொழுது இனிமைப் பண்பும் அதற் கேற்றவாறு நுணுகிய நிலையினை எய்தும், மேலும் பாகு ஆகும் போதும், கண்டு ஆகும்போதும் மேலும் மேலும் நுணுக்கம் எய்தும். அப்பொழுதெல்லாம் இனிமைப் பண்பும் அவ்வவற்றிற்கியைந்தவாறு துணுக்கம் எய்தும். இம் முறையே இறைவன் பொருள்களுடன் இ ைய ந் து ஆண்டாண்டு நுணுக்கம் எய்துவதற்கு ஒப்பாம் என்பதாகும். இறைவன் உயிர்ப் பொருள்களுடனும் ஏற்றவாறு இயைந்து இயக்கும் இயல்பே நுணுக்கம் என்பதாகும். சென்று சென்றணுவாய் தேய்ந்துதேய்ந்தொன்றாம். என்னும் தொடர் இறைவனது இந்த இயல்பினை உணர்த்துவ தாகும். இறைவனது திருவருளுக்குரியவராகிய சிவஞானிகள் இறைவனுடன் பிரிப்பின்றி ஒன்றியுடனாகும் வீட்டு நிலையில் இறைவனும் உளன்: ஆருயிரும் உள்ளது: முன் உயிரைப் பற்றி நின்று பின் அப்பிணிப்பினின்றும் விலகிச் செயலற்று அடங்கிய மலமாயைகன்மங்களும் உள்ளன. முன்பெல்லாம் உயிரை இறுகப் பிணித்து நின்ற மும்மலப் பிணிப்பு அவ் வுயிரை விட்டு நீங்கினமையால், உயிர் இறைவனது திருவருளில் மூழ்கி அவ்வருளே மேற்பட்டுத் தோன்றத் தான் அதன்கண் பிரிவற இயைந்து பேரின்பம் நுகர்ந்திருக்கும். அவ்வளவே அவ்வுயிரின் முன்னைய நிலைக்கும் பின்னைய நிலைக்கும் உள்ள வேறுபாடாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/386&oldid=864514" இலிருந்து மீள்விக்கப்பட்டது