பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பின்னிணைப்பு (2)

அடிகள் கையாண்ட பழமொழிகள்

ஒரு நாட்டின் பண்பாட்டை உணர்த்துவன அந்நாட்டு மக்கள்பால் அடிபட்டுவரும் பழமொழிகள். அவை நுண்ணிய தெள்ளிய கருத்துகளைக் கொண்டுள்ளன. மிக உயர்ந்த கருத்துகளை எளிய பழமொழிகளின் வாயிலாகப் பெரியோர்கள் வழங்குவதுண்டு. செய்யுளில் இவை கையாளப்படும் போது அதன் நடைக்கேற்ப மாற்று வடிவத்துடன் வெளிப்படும். திருவாசகத்தில் பயின்று வரும் பழமொழிகள் அகர வரிசையில் பாட்டெண்ணுடன் ஈண்டுத் தொகுக்கப் பெறுகின்றன. பாட்டெண் தருமபுரப் பதிப்பில் உள்ளபடி

அடி அகலா நிழல்பொல
ஆள்வரிலி மாடு போல (382)
ஆற்றங்கரை மரமும் அரசறிய வாழ்ந்த வாழ்வும் (107)
இருதலைக் கொள்ளி எறும்பினையொத்து (113)
இரைதேர் கொக்கு போல (380)
உண்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் (173)
உள்ளங்கை நெல்லிக்கனி (3.162)
ஊராமிலைக்கக் குருட்டா மிலைத்தது போல் (91)
எட்டும் இரண்டும் அறியாதவன் (53)
எறும்பிடை அகப்பட்ட நாங்கூழ் போல (129)
கடல்நீரைநாய் நக்கியது போல (117)
கரையில்லா வெள்ளம் போல (390)
கல்லில் நார் உரித்தாற்போல (4-97, 243, 288)
காலமெல்லாம் பாழுக் கிரைத்தல் (325) (காலம் - நீர்)
குருட்டுக் காளை ஊர் சுற்றியது போல
குழந்தை கையில் பொற்கிண்ணம் (95)