பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 மாணிக்கவாசகர்



நிபாதம் உண்டாக தமது உண்மையறிவினை மறைத்த மலத்தினின்றும் அஞ்சி, முன் சுமைபொறுத்தோனை ஒத்து, பின்கட்டு நீங்கியவனையும் ஒத்தார் என விளக்குவர்." 9 வாதவூரரும் 'அடியேனை நெருப்பிலிட்ட வெண்ணெய் உருகுவதுபோல நெஞ்சு உருகுமாறு உருக்குகின்ற காரணத்தால் என் அறிவினை மறைத்த ஆணவ மலத்தின் வலியினைத் தீர்ப்பவனாகி அடியேனை ஆட்கொள்ளும் கருணையங்கடல் இருக்கும் இடம் இதுவேயாகும்’ என்று எண்ணி நகரினுள் புகுகின்றார். பின்னர் திருக்கோயிலினுட் புகுந்து வலம் வரும்போது,

    மூலமறை யோதிமுடி யாதபொருள் தன்னைச்
    சீலமுனி வோர்தெளிய மோனவழி தோற்றும் 
    கோலமுறை கின்றதோர் குருந்தை 10

காண்கின்றார்.

திருத்தில்லையில் சிற்றம்பலத்தில் திருநடனம் புரியும் வடிவமும், ஆவின்கீழ் நால்வர்க்கு அறம் உரைத்த வடிவமும் குருத்திருமேனி கொண்டு இங்கு எழுந்தருளியிருக்கும் இத் திருவுருவமே என்ற உணர்வு அவர் உள்ளத்தே எழுகின்றது. குருநாதருடைய திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சுகின்றார். அன்புருவாகிய அவர் இறைவனது அருளாகிய வலையில் அகப்பட்டு நெஞ்சம் உருகுகின்றார். இந்நிலையில் குருவாய் வந்தருளிய சிவபெருமான் வாதவூரர் முடிமிசைத் தம் திருவடி சூட்டித் தீக்கை செய்தருளுகின்றார்(ஸ்பர்ச தீட்சை). திருவைந்தெழுத்தையும் உபதேசித்துப் பாசத்தொடர்பை அகற்றி இன்பமே திகழும் சிவ சொரூபமாக ஆக்கியருள்கின்றார். இதனைப் பரஞ்சோதியார்,


2. வாதவூரடிகளுக்கு-30, 31

10. டிெ-24 ෂී

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/42&oldid=1012250" இலிருந்து மீள்விக்கப்பட்டது