பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்துறை நிகழ்ச்சிகள்

25




சூக்க மாகுமைங் தெழுத்தினில்
சுற்றிய பாச
விக்க நீக்கிமெய் யானந்தம்
விளைகிலத் துய்த்துப்
போக்கு மீட்சியுட் புறம்பிலார்
பூரண வடிவம்
ஆக்கி னான்.ஒரு தீபகம்
போல்வரும் அண்ணல்

[1]

(சுற்றிய- பந்தித்த; பாசவீக்கம் - பாசக்கட்டு, தீபகம் - பார்வை)

என்று விளக்குவர். பஞ்சாக்கரம் தூலம், குக்குமம், அதி குக்குமம் என்று மூவகைப்படும். இங்கு 'வாதவூாருக்கு உபதேசித்தது சூக்கும பஞ்சாக்கரம். இஃது,

   நானேயோ தவஞ்செய்தேன்
      சிவாயநம எனப் பெற்றேன்
   தேனாயின் னமுதமாய்த்
      தித்திக்கும் சிவபெருமான்
   தானேவங் தெனதுள்ளம்
      புகுந்தடியேற் கருள்செய்தான்  12

என்று அடிகளே தம் திருவாசகத்துள் அருளிச் செய்யப் பெற்றதாகக் கொள்ளப்படும். இறைவன் நோக்கிய திருவருள் நோக்கத்தினால், காய்ச்சிய இரும்பு நீரினைப் பருகினாற் போல குருநாதனையும், அக்குரவன் உபதேச மொழி அருளியதையும், தம்மை மறைத்த பாசத்தையும், தம்மையும் மறந்துவிட்டு மெய்ஞ்ஞான வடிவினராய் ஒன்றனையும் அறியாத நிலையினை எய்துகின்றார். இங்ஙணம் மூன்றையும்


11. வாதவூரடிகளுக்கு-46 12 திருவா, திருவேசறவு-10

  1. 11
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/43&oldid=1012305" இலிருந்து மீள்விக்கப்பட்டது