பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 மாணிக்கவாசகர்


 மறத்தல் ஞேயம் (அறியப்படும் பொருள்), ஞானம் (அறிவு), ஞாதுரு (அறிபவன்) என்ற மூன்றும் நழுவாமல் நழுவி நிற்றல் என்பர்.

தேனும் பாலும் கன்னலும் அமுதமாகித் தித்தித்து ஊனையும் உள்ளத்தையும் உருக்கவல்ல சிவ உணர்வு வாதவூரரது மனத்தகத்தே பொங்குகின்றது; புறத்தேயும் கசிந்து படர்கின்றது. இந்நிலையில் அவர்தம் நாவிலே ஞான வாணியாகிய கலைமகள் வந்து அமர்கின்றாள். அன்புருவாய வாதவூார் தம் வசமிழந்து மெய்ம்மயிர் சிலிர்ப்பக் கண்ணீர் மல்க நாத்தழுதழுப்பத் தம்மையாட் கொண்டருளிய குருமனணியைத் தொழுது பழுதிலாத சொற்களாகிய மாணிக்கமணிகளை வரிசைப்படுத்தி அன்பாகிய வடத்திற் கோத்து இறைவன் திருவடிகளில் பாமாலையாகச் சாத்துகின்றார். குருவாக வந்தருளிய பெருமான் "மாணிக்கவாசகன்' என்ற திருநாமத்தைச் சூட்டியருளுகின்றார். தீக்கை பெறும்போது ஆசாரியர் சீடருக்கு ஏற்புடைப் பெயர் வழங்கப்படும் மரபுப்படி இப்பெயர் வழங்கப் பெற்றது என்றும் கொள்ளலாம். வைணவ சமயத் திலும் பஞ்ச சம்ஸ்காரத்திற்குப் பிறகு தாஸ்ய காமம் வழங்கப் பெறுவது ஈண்டு நினைவுகூரத் தக்கது.' வாதவூரர் என்ற பெயரைவிட மாணிக்கவாசகர் என்ற பெயரே அன்று முதல் அடிகளுக்குச் சிறப்பாக வழங்கி வருகின்றது.

இறைவனது பொருள்சேர் புகழை விரித்துரைக்கும் திருப்பாடல்களை அடிகளே 'மணி வார்த்தை' என்ற பெயரால் குறிப்பிட்டுள்ளதை நாம் நினைக்கின்றோம்.

   சிந்தனைநின் தனதாக்கி நாயி னேன்றன்
      கண்ணிணைநின் திருப்பாதப் போதுக் காக்கி 
   வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன்   
      மணிவார்த்தைக் காக்கி      13

13 திருவா. திருச்சதகம்-26
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/44&oldid=1012303" இலிருந்து மீள்விக்கப்பட்டது