பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 மாணிக்கவாசகர்


வேண்டா. இக்குருத்தமரத்து நிழலில் தெய்வபீடம்அமைத்து அதன்மீது நம் திருவடிகளை வைத்து வழிபட்டிருப்பிராக, ஒருநாள் இந்தப் பொய்கையின் நடுவே ஒரு தீப்பிழம்பு தோன்றும். நீங்கள் யாவரும் அத்தழலில் மூழ்கி நம்மை அடைவீர்களாக எனக் கூறித் தம்முடன் தொடரும் அடியார்களை நில்லுமின்’ என நிறுத்திக் கயிலையை நோக்கிப் புறப்படுகின்றார். அவரை பிரிந்திருக்க முடியாத மணிவாசகப் பெருமான் அவரை மீண்டும் தொடர்கின்றார். அடிகளின் வருத்தத்தைப் போக்கக் கருதிய இறைவன் ஆங்குள்ள கொன்றை மரத்தின் நீழலில் சிறிது நேரம் தாமதித்து, வாதவூரரை அருகே அழைத்து "நாம் எங்கும் நிறைந்திருப்பினும், அன்பர்களாகிய அடியார்களின் வினைத் தொடர்பகற்றி ஆட்கொள்ளுவதற்காக இப்பெருந்துறையில் குருத்தமர நீழலில் எப்பொழுதும் எழுந்தருளியிருப்போம். இங்குச் சூக்கும ஒலியாகிய சங்கொலியைத் தவிர பிற இசைக் கருவிகள் ஆகா. அடியார்களுடன் நீ குருந்தடியில் நம்மை வழிபட்டிருப்பாயாக. பொய்கையில் தீப்பிழம்பு தோன்றுங்கால் அடியார்கள் அதனுள் புகும்பொழுது நீயும் உடன்புகாது இத்திருத்தலத்தைவிட்டு நீங்கித் திருவுத்தர கோசமங்கையை அடைந்து அங்குச் சித்திகளெல்லாம் பெறுக. பின்னர் இலிக்கத்திருமேனி கொண்டுள்ள திருத்தலங் களிலெல்லாம் இக்குருவடிவத்தையே கொண்டு மகிழ்வாயாக. பின்னர்த் திருக்கழுக்குன்றத்தைச் சேவித்து அங்கிருந்து மீண்டும் தென்திசை நோக்கி வந்து தில்லைப் பொன்னம்பலத்தை அடைவாய். அங்குப் புத்தர்களைவாதில் வென்று நம் திருவடிப் பேற்றினைப் பெற்று இன்புறுவாய்' எனப் பணித்தருளுகின்றார். இங்ங்ணம் அறிவுறுத்திய பெருமானை அடிகள் வணங்கி நின்று எம்பெருமானே, பெருந்துறை நகரிலன்றிப் புலியூர்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/50&oldid=1012327" இலிருந்து மீள்விக்கப்பட்டது