பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்துறை நிகழ்ச்சிகள் 33

 பொன்னம்பலத்தே முத்திபெருவதாகக் கூறியது என்கருதி' என வினவுகின்றார். இறைவனும், "புழுவானது தான் எடுக்கப்பட்ட இடத்தின்கண் அன்றி வைக்கப்பட்ட இடத்திலேயே வேட்டுவனாகிய குளவியின் வடிவத்தைப் பெறும். அதுபோல இப்பெருந் துறையில் சிவஞானமாகிய மெய்ஞ்ஞானத்தை உபதேசித்தோம். சிவாதுபூதியாகிய பரமுத்தி 20 உனக்கு தில்லையம்பலத்தில் உண்டாகும்"

எனக் கூறித் தில்லையின் சிறப்பினை எடுத்துரைத்து அடிகளின் நெற்றியில் திருநீறு சாத்திச் சிவபெருமான் மறைந்தருளு கின்றார். அடிகளும் அடியார் குழுவை வந்தடைத்து குருத்தின்கீழ்த் தெய்வபீடம் அமைத்து வழிபட்டுக் காலம் போக்குகின்றார். இக்காலத்தில் "அற்புதப் பத்து" "அதிசயப் பத்து" முதலிய பனுவல்களைப் பாடி இறைவனைப் போற்று கின்றார்.

சிலநாட்களுக்குப் பிறகு இறைவன் பணித்த வண்ணம் திருத்தமம் பொய்கையில் தீப்பிழம்பு தோன்றுகின்றது. அடியார்கள் எல்லாரும் அஞ்செழுத்தோதி அதில் புகுகின்றனர். சிவபெருமான் உமையம்மையாருடன் விடை மீது தோன்றிக் காட்சி நல்குகின்றார். அடியார்கள் அனைவரும் சிவகணநாதர்களாகுகின்றனர். சிவபெருமான் அடியார்களுக்கு அருள்புரிந்து அவர்களுடன் மறைந்தருள் கின்றார். இந்நிலையில் கொன்றை மரநிழலில் சிவயோகத்தில்


20. பரமுத்தி - சித்தாந்தத்தில் இதுவே முடிந்தமுத்தி. வித்தியாதத்துவங்கள் ஏழிலும் உள்ள் சீகண்ட புவனம் முதலிய உருத்திர உலகங்களை அடைதல் பரமுத்தியாகும், பல்வேறு முத்திகள் பற்றிய விளக்கத்தை இவ்வாசிரியர் எழுதியுள்ள 'சைவசமய விளக்கு (பாரிநிலையம், சென்ன்ை 600 108) என்ற நூலில் (கடிதம்-44) கண்டு தெளிக. மா-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/51&oldid=1012329" இலிருந்து மீள்விக்கப்பட்டது