பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 மானிக்கவாசகர்



அமர்ந்திருந்த வாதவூரடிகள் சிவனடியார்களாகிய அன்பர்களைக் காணாது அழுதரற்றி மெய்தான் அரும்பி (5) எனத் தொடங்கும் திருச்சதகம்' பாடிப் போற்றுகின்றார், (இவ் வரலாறு திருவாதவூரர் புராணத்தில் கண்டது).


இன்றும் திருப்பெருந்துறைச் சிவாலயத்தில் திருவாசகப் பாடல் ஒலிகளைக் கேட்டு மகிழலாம். திருவாசகப் பாராயணந்தை எல்லாக் காலங்களிலும் கேட்டுக் களிக்கலாம். இத்திருக்கோயிலின் இறைவன் பெயர் ஆத்மநாதர் இறைவி யோகாம்பிகை. கருவறையில் இலிங்கமோ, வேறு திருவுருவமோ இல்லை. இங்கு இறைவனும் இறைவியும் அருவமாய் எழுந்தருளியிருப்பதாக அதிகம். இதனைக் குறிப்பிடும் பாங்கில் இரண்டு பீடங்கள் மாத்திரம் வைக்கப் பெற்றுள்ளன. பீடங்களுக்கே வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. எல்லாச் சிவாலயங்களிலும் நந்திதேவரும் சண்டேசுவரரும் ஆலயக் காவலர்களாக இருக்கும் மரபுக்கு மாறாக மாணிக்கவாசகரே ஈண்டு வாயில் காப்பாளராக அமைந்துள்ளார். நந்திதேவருக்கும் சண்டேசுவாருக்கும் இத்திருக்கோயிலில் இடம் இல்லை.

பூவிருந்தவல்லியில் திருக்கச்சி நம்பியின் சந்நிதியும், திருமழிசையில் பக்திசாரரின் சந்நிதியும் சிறப்பாக இருப்பது போல் இங்கும் மாணிக்கவாசகர் சந்நிதிக்குத்தான் சிறப்பு. சந்நிதியில் ஓர் அழகான அடிகளின் பெரிய திருவுருவம் உள்ளது; மேற்கு நோக்கிய சந்நிதி இவர் சந்நிதிக்கு எதிரே கிழக்கு நோக்கிய யோகாம்பிகையின் சந்நிதி உள்ளது. யோகத்திலிருக்கும் அம்பிகையாதலால் சுற்றிலும் சலாகை யடித்த சுவர் மூடியுள்ளது. தீபாராதனை நடைபெறும் பொழுது மட்டிலும் வெளிச்சம் சிறிய துவாரங்களின்வழி யாகத் தெரியும். மாணிக்கவாசகருக்கும் அம்மனுக்கும் ஒரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/52&oldid=1012330" இலிருந்து மீள்விக்கப்பட்டது