பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்துறை நிகழ்ச்சிகள் 35


 வேளையில் ஒரே விதமாகத் தீயாராதனை நடைபெறு கின்றது. மாணிக்கவாசகருக்கு ஆகமவிதிப்படி ஆதிசைவர் களும், மூலத்தானத்திற்கும் அம்மன் சந்நிதிக்கும் வைதிக அந்தணர்களும் பூசை செய்கின்றனர். தில்லையில் மூவாயிரவர் பரம்பரையைப் போல, இங்கே முந்நூற்றுவர் பரம்பரையில் வந்தவர்களாகச் சொல்லிக் கொள்ளுகின்றனர் இந்த வைதிகப் பிராமணர்கள்.

இறைவன் மாணிக்கவாசகருக்குக் குருமூர்த்தி விடிவினராக வந்து உபதேசித்ததைக் காட்டுவதற்காக குருமூர்த்தி என்ற தட்சிணாமூர்த்தி சந்நிதி தனியாக உள்ளது. அதனருகே குருந்தமரம் ஒன்றும் நிற்கின்றது. இதனடியில் தான் மாணிக்கவாசகர் திருவடி தீட்சை பெற்றார் என்பது ஒர் ஐதிகம். திருக்கோயிலின் தென்புறத்திலுள்ள தெப்பக் குளம் மிகவும் சிறப்புடையது. மாணிக்கவாசகருடன் இருந்த அடியார்கள் அவரைப் பிரிந்து முத்தியடைந்தபோது இக் குளத்தில் தோன்றிய தீப்பிழம்பிலேதான் மூழ்கி மறைந்த தாகச் சொல்வர், இதனால்தான் இத்திருக்குளம் 'அக்கினி தீர்த்தம்’ என்று வழங்குவதாகவும் கூறுவர்.

சிற்பங்கள் :

ஆவுடையார் கோயிலின் சிறப்பு அதன் சிற்பத்தில் இருப்பதாகக் கூறுவர் திரு. சோ. சிவபாதசுந்தரம். "சுவாமி சந்நிதிக்கு முன்னால் இருக்கும் கனக சபை என்ற மண்டபம் முழுவதும் கொத்துக் கொத்தாக மிகவும் அருமை யான சிற்ப உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சிவபெருமான் மணிவாசகருக்காக நரிகளைப் பரிகளாக்கித் தாமும் குதிரைச் சேவகரானார் என்பதைச் சித்திரிக்கும் ஒர் அழகான பரிமேலழகர் சிற்பம் இருக்கின்றது. இதன் பெருமையை வேறெங்கும் காணமுடியாது. இது இருக்கும் மண்டபம் குதிரைச்சாமி மண்டபம் என்று வழங்குகின்றது. இதைவிட, குறவன் குறத்தி வடிவங்கள், பிற ஆலயங்களி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/53&oldid=1012331" இலிருந்து மீள்விக்கப்பட்டது