பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 மாணிக்கவாசகர்



போல, மிக அழகுபட இரு தூண்களில் செதுக்கப்பட்டிருக் கின்றன. குறத்தியின் கண்களில் காணப்படும் "வலைவீசும்" பார்வையும் அவள் உடலின் நெளிப்பும், கையிலிருக்கும் கூடையின் இழைப்பும் மிக ஆச்சரியப்படத்தக்கக் கலை நுட்பம் வாய்ந்தவை. மதுரைக் கிருஷ்ண தேவராயரும் தேவியும் இங்கு சிவாரூபமாக வைக்கப்பட்டிருப்பதால் இவ்வாலயம் அவர்கள் காலத்திலே புதுப்பித்துக் கட்டப் பெற்றதென்று ஊகிக்கலாம்.

இவற்றையெல்லாம் தவிர திருந்பெருந்துறையிலுள்ள கொடுங்கை என்ற எழுதகந்தான் மிகவும் பிரசித்தி பெற்ற ஒற்ப அமைதி. தனிக்கல்லிலேயே உத்தரங்களும் சலாகைகளும் மேற்கூரையும் சேர்ந்த மாதிரியாகப் பொளிந்து அமைக்கப்பட்டிருப்பது வியக்கத்தக்கது. சங்கிலித்தோரணங்களும் தூண்களும், விதானங்களும் கல்லிலே மிக அழகாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. அநேகமாக யாவும் கேரள சிற்ப முறையிலேயே காணப்படுகின்றன’’’ 21

மாணிக்கவாசகருக்கு உபதேசம் நிகழ்ந்த பின்னரே திருப்பெருந்துறைத் திருக்கோயில் அமைக்கப்பெற்ற தென்றும், இங்ஙனம் உபதேசம் புரிந்தருளிய அருள்நிலையமாக இப்பொழுதுள்ள பெருந்துறைக் கோயிலில் சிவவிங்கத் திருவுருவமும் ஏனைய அங்கங்களும் அமைந்தில்லாமையே அடிகள் காலத்திற்கு முன் அங்கே திருக்கோயில் இல்லாமையைப் புலப்படுத்தும் என்றும் மறைமலையடிகள் கூறுவர். ஆயினும் திரு. க. வெள்ளை வாரணனார்

  செந்தழல் புரைதரு மேனியும் காட்டித்
     திருப்பெருந்துறையுறை கோயிலுங் காட்டி 
  அந்தணனாவதும் காட்டிவந்  தாண்டாய்"

21. மானிக்கவாசகர் அடிச்சுவட்டில் (இரண்டாம் பதிப்பு)-பக் 52-53

22. திருப்பள்ளி.8 (373)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/54&oldid=1012332" இலிருந்து மீள்விக்கப்பட்டது