பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



4. பெருந்துறை (குருந்தமரம்) அருளிச் செயல்கள்

மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் தங்கியிருந்த போது பல திருவாசகப் பாடல்களை அருளியதாக அவர் வரலாறு கூறும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. மாணிக்க வாசகர் காலத்துக்குச் சில நூற்றாண்டுகட்குப் பின்னர் இப்புராணங்கள் எழுந்தவையாதலின் ஒவ்வொருவரும் திருவாசகத் தொகுப்பை தம்முன் வைத்துக் கொண்டும் தம் கற்பனைச் சிறகுகளை விரித்துக்கொண்டும் ஒவ்வொருவிதமாகப் பறக்கின்றனர். இதனால் பாடல்கள் அருளிய விவரமும் புராணத்திற்குப் புராணம் வேறுபடுகின்றது. சிலவற்றை இப்பகுதியில் காண்போம். எப்பாடல்கள் எங்குப் பாடப் பெற்றால் என்ன? நமக்குப் பாடல்கள் கிடைத்துள்ளன. அவை பாடப் பெற்ற இடங்களையும் சந்தர்ப்பங்களையும் பற்றி அதிகமாகக் கவலை கொள்ளாமல் பாடல்களில் மட்டிலும் ஆழங்கால்பட்டு அநுபவித்து மகிழ்வோம்.

நம்பி திருவிளையாடல் (13-ஆம் நூற்றாண்டு) கூறுவது:

வாதவூரடிகள் குதிரை வாங்கப் புறப்படுகின்றார், திருப் பெருந்துறையை அடைகின்றார்; தம் வசம் இழக்கின்றார். இதற்குமுன் செல்வத்தின் மீதிருந்த அவா அற்றுப் போதலையும் தம் நெஞ்சம் ஒருவழி ஒடுங்குதலையும் காண் கின்றார். மிகவும் வியந்து இவ்விடத்தில் ஏதோ புதுமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/56&oldid=1012345" இலிருந்து மீள்விக்கப்பட்டது