பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 மாணிக்கவாசகர்


 முத்திநெறி அறியாத மூடரொடு கூடிக் காலங்கழிக்கின்ற தம்மை தானே எளி வந்து பத்திநெறி அறிவித்து, பழவினைக ளெல்லாம் (சஞ்சிதம்) அறவே சிதைத் தொழியும்படிச் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி, ஆண்டு கொண்டருளினான் என்று வெளியிட்டு வியந்து போற்றுகின்றார்.

அடிகள் சிவாநுபவமாகிய பேரின்பத்தினை அடைதற்குத் தாம் மேற்கொண்ட சாதனங்கள் யாவை என எண்ணிப் பார்க்கின்றார். தாம் அதன்பொருட்டு மேற்கொண்ட முயற்சிகளாக எதுவும் புலப்படவில்லை. முயற்சியும், உளப்பாடும் இன்றி இறைவன் அருளால் தமக்குக் இடைத்த சிவாதுபவத்தை வியந்து உரைக்கும் முறையில் இப்பதிகப் பாடல்கள் அமைந்திருத்தலால் அநுபவவழியறியாமை என இதற்கு முன்னோர் கருத்துரைத்தனர் என்பது அறியத்தக்கது.

பெரியாழ்வார், தம் திருமொழியில் (1. 8) கண்ணன் பிள்ளைப் பருவ நிகழ்ச்சிகளைக் காட்டுமிடத்து "அச்சோ பருவம்" என்ற ஒரு பருவநிலையைக் குறிப்பிடுகின்றார். அச்சோ என்பது பழங்காலத்தில் குழந்தையை "அணைத்துக் கொள்’ என்று வேண்டுதற்கு ஏற்ற குறிப்புச் சொல்லாகக் கொள்ளப் பட்டதாகக் கூறுவர் வியாக்கியானக்காரர். கண்ணன் தன்னை(யுசோதை நிலையிலுள்ள பெரியாழ்வார்) அணைத்துக்கொள்ளுதலை நினைக்கும்போது தோன்றும் பரமானந்தத்தில் மூழ்கி நெஞ்சுருகிச் சொல்லிடிந்து வாய் விட்டுச் சொல்ல மாட்டாமல் அவ்வாச்சரியத்தை ஒரு தரத்திற் கிருதரம் அச்சோ அச்சோ என்கிறாள் என்கிறார் அவர் இதனால் இறைவன் தமக்குச் செய்த கருணையினை. திருவருளில் சேர்த்துக் கொண்டதை . வாய்விட்டுச் சொல்ல முடியாமல் அநுபவத்த அதிசயத்தால் அச்சோ' என்கின்றார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/62&oldid=1012357" இலிருந்து மீள்விக்கப்பட்டது