பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்துறை அருளிச் செயல்கள் 45



என்பது மிகப் பொருத்தமுடையதாக அமைகின்றது இங்ஙணம் இறைவனது பொருள்சேர் புகழைப் போற்றிப் பரவும் அடிகள் அமைச்சர் கோலம் நீங்கி முற்றத் துறந்து நான்மறை முன்வராய்த் திகழ்கின்றார்.

குருவாய் வந்தருளிய இறைவன் நான்மறையோதும் மாணாக்கர்களாகிய அடியவர் கூட்டத்தை வாதவூரடிகளுக்குக் காட்டியருளுகின்றான். அவர்களைக் கண்ட அடிகள் “நண்பர்களே, நீங்கள் முன்னை நல்வினைப் பயனால் ஈசனிடத்தது அன்பு பூண்டு அவனைப் பிரியாதிருக்கப் பெற்றீர்கள். யானும் அன்பர்களாகிய நூம்மை அடையப் பெற்று மகிழ்கின்றேன்" என்று கூறி அதிசயப்பத்து' (26) பாடுகின்றார்.

அதிசயப் பத்து (26) -

முத்தியிலக்கணம் மோட்சத்தின் அடையாளம் என்பது முன்னோரின் கருத்துரை. "அதிசயம்" என்ற சொல் மிகுதி என்னும் பொருளுடையது. தமக்குத் திருவருள் சுரந்த இறைவனது பெருமையின் மிகுதியைக் குறித்து அடிகள் வியந்து போற்றுவதாக அமைந்தது இப்பத்து. மூலமலத்திற்குப் பயந்த மன ஏக்கம் பொருந்திய அடியார்களோடு கூட்டிய இறைவனின் திருவருட் பேற்றிற்கு வியந்து கூறுவதாகவும் கொள்ளலாம். இப்பத்தில்,

  பொத்தை யூன்சுவர் புழுப்பொதிக் துளுத்தசும்
     பொழுகிய பொய்க்கூரை 
  இத்தை மெய்யெனக் கருதிநின் றிடர்கடற்
     சுழித்தலைப் படுவேனை 
  முத்து மாமணி மாணிக்க வயிரத்த 
     பவளத்தின் முழுச்சோதி 
  அத்த னாண்டுதன் அடியரிற் கூட்டிய
     அதிசயம் கண்டாமே (7) 
  (பொத்தை-பொத்தல்; இத்தை.இதனை)

4. திருவாதவூரர் புராணத்திலும் திருப்பெருந்துறையில் பாடப் பெற்றதாக உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/63&oldid=1012360" இலிருந்து மீள்விக்கப்பட்டது