பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 மாணிக்கவாசகர்



என்பது ஏழாம் பாடல். இஃது "உடற்கூற்று வண்ணத்தை" அற்புதமாக விளக்குவது. இந்த உடல் சிறிதும் பெரிதுமான ஒன்பது வாயில்களும் எண்ணிலா நுண்ணிய மயிர்ப்புழைகளும் ஆகிய பொத்தல்களையுடைய தசைச்சுவர்களைக் ாேண்டது. இதனுள் புழுக்கள் அடைக்கப் பெற்றுள்ளன. நிண நீர் ஒழுகும் வாய்ப்புகளையுடையது. தோலால் வேயப் பெற்ற அழகிய குடிலுக்கு ஒப்பான பொய்யானது இவ்வுடல். இதனை மெய்யெனக் கருதித் தருக்கி நின்று பிறவித் துன்பக் கடலில் தோன்றும் காமச் சுழித்தலைப்பட்டு நையும் இயல்பு வாய்ந்த தம்மை முத்தும், நீலமணியும், செம்மணியும், வயிரமும், பவழமும் விரவி ஒருங்குதரும் முழுச்சுடர்போல் வயங்கும் அனைத்துயிர்க்கும் அத்தனாய்த் திகழும் சிவபெருமான் ஆண்டுத் தன் மெய்யடியார் திருக்கூட்டத்தில் கூட்டியருளிய அற்புதம் கண்டதாகக் கூறுகின்றார். பத்துப் பாடல்களும் “அடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாமே" என்று இறுகின்றன. பாடல்கள் யாவும் அடிகள் இறைவன் திருவருளால் பொய்ந்நெறியாகிய பிறவித் தொடர்ச்சியை விட்டு நீங்கிச் சித்தமலம் அற்றுப் பத்தர் இனத்தராய்ப் பரன் உணர்வோடு ஒன்றியுணரும் மெய்த் தவச் செல்வராய் முத்திநெறியில் திகழும் மாண்பினைப் புலப்படுத்துவனவாக அமைந்திருத்தலால் இவை சீவன் முத்தரது இயல்பினை விளக்கும் சிறந்த இலக்கியமாகத் திகழ்கின்றன.

அடியார்களை வாதவூரருக்குக் காட்டிய இறைவன் "மாணிக்க வாசக இங்குநில்" என்று கூறித் தம் மாணாக்கர்களாகிய 999 பேர்களுடன் விரைவில் மறைகின்றார். இந் நிலையில் ஆசிரியப் பெருமானையும் உடன் வந்த அடியார்களையும் காணப் பெறாத அடிகள் அளவிலாத் துயருற்று அழுது அரற்றுகின்றார். தம்மை ஆண்டருளிய குருமணியை நினைந்து கண்ணிர் ஆறாகப் பெருக கோயிற்பத்து’ (22),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/64&oldid=1012361" இலிருந்து மீள்விக்கப்பட்டது