பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்துறை அருளிச் செயல்கள் 51




  பரிந்து வந்து பரமானந்தம்
     பண்டே அடியேற் கருள்செய்யப் 
  பிரிந்து போந்து பெருமாகிலத்தில் 
  அருமா லுற்றே னென்றென்று 
     சொரிந்த கண்ணிர் சொரியவுண்ணீர்
  உரோமம் சிலிர்ப்ப வுகந்தன்பாய்ப் 
     புரிந்து நிற்பதென்றுகொல் லோவென்
  பொல்லா மணியைப் புணர்ந்தே (6)
(பரிந்து இரங்கி, அருமில் வேறென்றாலும் நீக்குதற்கரிய மயக்கம்; புரிந்து - விரும்பி)

என்பது இப்பதிகத்தின் ஆறாம் பாடல். இப்பதிகப் பாடல்கள் யாவும் படிப்போரைப் பரவசப்படுத்தும் பான்மையவை.


7.செத்திலாப் பத்து (23)

10 ஆன்மா அடைந்த சிவானந்தத்தை அளவு அறுக்க முடியாத வண்ணம் சிவபோதம் (பசுபோதம்) இடையிடையே குறுக்கிட்டுத் தடை செய்தவின் அதுவும் சாக வேண்டிச் செத்திலேன்' என இரங்குவதாகக் கூறப்பெறுவது இது. ஈண்டுச் சாதல் என்பது பசுபோதம் முற்றும் கெட இறைவனது திருவருளாகிய ஓங்குணர்வில் உள்ளடங்கித் தூங்குதல். அத்தகைய சாதல் தனக்கு வாய்க்க வில்லையே என ஏங்குதலாகிய ஒரு பொருள் நுதலிய பத்துப் பாடல்களையுடைமையால் இது "செத்திலாப்பத்து" என்ற பெயரைப் பெறுகின்றது. பதிகம் என்பது பலவகைப் பொருளையும் தொகுதியாகச் சொல்லுதலாகும். செத்தி லாமையாகிய ஒரு பொருளே நுதலிய இது "செத்திலாப் பதிகம்’ என்னாது 'செத்திலாப் பத்து’ எனக் குறிக்கப்


10. திருவாதவூரடிகள் புாரணமும் இது திருப்பெருந் துறையிலேயே அருளிச் செய்யப்பெற்றதாகவே கூறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/69&oldid=1012408" இலிருந்து மீள்விக்கப்பட்டது