பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



52

மாணிக்கவாசகர்



பெறுவதாகின்றது. அன்னைப் பத்து, குயில் பத்து, அடைக்லப் பத்து, யாத்திரைப் பத்து முதலானவற்றிற்கும் இஃது ஒக்கும்.

இதற்குச் "சிவானந்தம் அளவறுக்கொனாமை - அதாவது சிவானந்தம் அணுகிச் செயிக்கப்படாமை" என்பது பழைய குறிப்பு. 'பசுபோதம் முற்றும் கெடவேண்டலே செத்திலாப் பத்தாகும் என்று திருப்பெருந்துறைப் புராணம் செப்புகின்றது. தூய நீர் நிலையில் சென்று நீராடப் புகுந்தார் அந்நீரினுள் முங்கி முழுகி இன்புற விழைவரேயன்றி அந்நீரினை வேறாக முகந்து கொண்டு வந்து சிறிது சிறிதாக ஊற்றி முழுக எவரும் விரும்பார். இம் முறையால் ஆன்மபோதம் முற்றும் கெட்டொழிதல் வேண்டும் என இறைவனை வேண்டுபவர் அதற்கு நிலைக்களனாகிய தமது உடம்பும் பொன்றக் கெட இறந்து படவில்லையே என இரங்கி இறைவனை நோக்கி முறையிடும் நிலையில் பத்துப் பாடல்களும் அமைந்துள்ளன.

   அறுக்கி லேன்உடல் துணிபடத் தீப்புக்
      கார்கி லேன்திரு வருள்வகை அறியேன்
   பொறுக்கி லேன்உடல் போக்கிடல் காணேன்
      போற்றி போற்றியென் போர்விடைப் பாகா
   இறக்கி லேனுனைப் பிரிந்தினி திருக்க
      என்செய் கேனிது செய்கவென் றருளாய்
   சிறைக்க ணேபுனல் நிலவிய வயல்சூழ்
      திருப்பெ ருந்துறை மேவிய சிவனே (6)

          [துணிபட - துண்டுபட].

என்பது இப்பத்தின் ஆறாவது பாடல்.

இப்பத்தின் ஐந்தாம் திருப்பாடலில் ஆட்டுத்தேவர் - உயிர்களின் உள்ளத்தைப் பலதுறைகளில் ஈர்த்து அலைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/70&oldid=1012486" இலிருந்து மீள்விக்கப்பட்டது