பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 மாணிக்கவாசகர்



எண்ணப்பதிகம் (44)

அடிகள் தமது உள்ளக் கிடக்கையினை இறைவனுக்குத் தெரிவிக்கும் முறையில் இப்பனுவலை ஆக்கியிருத்தலால் இஃது "எண்ணப்பதிகம்’ என்ற பெயர் பெற்றது. எண்ணம் - உள்ளக் கருத்து. ஒழியா இன்பத்து உவகை என்பது முன்னையோர் கருத்துரை. அடிகள் தம்மை ஆட்கொண்டருளிய முதல் வனது திருவருளில் திளைத்துப் "பாருருவாய பிறப்பற வேண்டும்; பத்திமையும் பெறவேண்டும்; திருவருளைக் காண வேண்டும்; அதற்குத் தடையாகிய உடல் உலகம் முதலிய வற்றின் ஆசை அறவேண்டும்" (1) என இவ்வெண்ணங்களை அறிவிப்பதால் இஃது எண்ணப்பதிகம் எனப் பெயர் பெறுகின்றது. இதில் ஆறே பாடல்கள் உள்ளன. "தில்லைமன்றுள் எழுந்தருளியிருக்கின்ற இறைவனது திருநாமத்தைச் செப்புவதாலுண்டாகும் இன்பத்தை அருளுக என்று வேண்டிக் கொள்வது எண்ணப்பதிகம்” என்று திருப்பெருந் துறைப் புராணம் கூறும். இப்படிக் கூறுவதால் இப்பதிகம் தில்லையில் அருளப்பெற்றதாக மயக்கத்தை விளைவிக்கின்றது. இது

  பத்தில னேனும் பணிந்தில னேனுமுன்
     உயர்ந்தபைங் கழல்காணப் 
  பித்திலனேனும் பிதற்றில னேனும்
     பிறப்பறுப் பாயெம் பெருமானே 
  முத்தனை யானே மணியனை யானே
        முதல்வனே முறையோவென் 
  றெத்தனை யானும் யான்றொடர்ந் துன்னை
     இனிப்பிரிந்தாற்றேனே. (4) 

என்பது நான்காம் பாடல்.


15. தருமபுரப்பதிப்பில் இது தில்லையில் அருளியதாகக் கூறப்பட்டுள்ளது. இது திருப்பெருந்துறைப் புராணத்தைதழுவி எழுதியது. ஆனால் திருவாதவூரர் புராணம் இது திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பெற்றதாகவே கூறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/76&oldid=1013169" இலிருந்து மீள்விக்கப்பட்டது