62 மாணிக்கவாசகர்
என்று திருப் பெருந்துறைப் புராணம் இதற்கு விளக்கம் கூறும்.
"அறிவித்து அன்புறுதல்" என்பது இப்பதிகத்திற்கு முந்தையோர் கூறிய குறிப்புரை. அதாவது, நின்னால் அறியப்படாதது உரைக்க அறிவை" என்றது. இதன் பொருள். சிவனார் திருவாய் மலர்ந்தருள்வது வேதவாக்கு. அந்த வேதவாக்குப்படி பிரம்மம், விஷ்ணு, நாராயணன், சிவம் என்னும் சொற்களெல்லாம் ஒரே பரம்பொருளைக் குறிக்கின்றது. இதுவே திருவார்த்தை; அதாவது மெய்ப் பொருள் விளக்கம். "வார்த்தை" என்ற சொல்லை அடிகளே தாம் அருளிய திருவாசகத்தில் பல இடங்களில் ஆண்டுள் ளார். வாக்கு உன் மணி வார்த்தைக் காக்கி'(30) எனவும், வார்த்தையும். பேசி (165), எனவும், "என்னை ஓர் வார்த்தையுட்படுத்துப் பற்றினாய்' எனவும்,
ஆசிரிப்பார்களிப்பார் தேனிப்பார் திரண்டு திரண்டுன் திருவார்த்தை விரிப்பார் கேட்பார் மெச்சுவார் (384)
எனவும் ஆண்டிருத்தல் காணலாம். இங்கெல்லாம் இச்சொல் இறைவனது பொருள்சேர் புகழ் என்ற பொருளிலும் இறைவன் அருளிய உபதேசமொழி என்ற பொருளிலும் ஆளப் பெற்றுள்ளது. எனவே, அவரருளிய வார்த்தை 'திருவார்த்தை என்ற சிறப்புடன் இறைவனது புகழை விரித்துரைக்கும் திருவுடைய வார்த்தை எனவும், இறைவனால் திருவாய் மலர்ந்தருளப் பெற்ற திருவுடைய உபதேச வார்த்தை எனவும் இரு வகையாகப் பொருள் கொள்ளும் முறையில் அமைந்துள்ளதைக் கண்டு தெளியலாம். இப்பதிகத்தில் இறைவனது திருவார்த்தைகளாக அருவிச் செய்யப் பெற்றவை: திருப்பெருந்துறையில் அடிகள்