பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓம்சக்தி சிறப்புப்பாயிர மாலை (புலவர். த. பெரியாண்டவன், எம்.ஏ. உதவி இயக்குகள், தமிழ்வளர்ச்சித் துறை சென்னை-108) திருநீறு ஒளிரும் நெற்றி தீந்தமிழ் மணக்கும் செவ்வாய் திருமால்சீர் பரவும் நெஞ்சம் சேர்ந்தாரைத் தாங்கும் அன்பு உருவாகத் தோன்றும் செம்மல் உயர்சுப்பு ரெட்டி யாராம் பெருமகன் சீர்மை முற்றும் பேசுதல் யாரா லாகும்? சொல்லிலே இனிமை; தூய நெஞ்சிலே தமிழு ணர்ச்சி, அல்லுநன் பகலு மெல்லாம் ஆய்வுகள் செய்தல் மற்றும் பல்துறை வாயி லாகப் பைந்தமிழ்த் தொண்டு செய்தல் வல்லநல் லறிஞர் சால்பு வையகம் அறிந்த தன்றோ! ஆங்கில மொழிவ ளப்பம் அருந்தமிழ் பெறுதல் வேண்டும் தூங்காமல் அறிஞ ரெல்லாம் தொண்டுகள் செய்ய வேண்டும் ஏங்கிடும் தமிழ்த்தாய் ஏக்கம் ஏகிட வேண்டும் என்னும் பாங்குளம் வேண்டு மென்பார் பலசெய்தி சுவையாய்ச் சொல்வார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/9&oldid=864591" இலிருந்து மீள்விக்கப்பட்டது