பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72 மாணிக்கவாசகர்



என்பது ஏழாம் (இறுதிப்) பாடல். இதில் 'நரியைக் குதிரை ஊர்தியாக்கி உலகமெல்லாம் பரவச் செய்தாய். பாண்டியன் ஆண்ட மதுரை நகர் முழுவதும் பித்து ஏறும்படி செய்தாய். திருப்பெருந்துறையுடையவனே, அருமையாகிய மெய்ப் பொருளே, நாசமடையாத தந்தையே, பாண்டிக் கருணைக் கடலே, கட்புலனாகாத ஆன்ம சோதியே, உய்வு அடைவதற்கு நான் செய்யக் கிட்ப்பது யாது? என்று சிறிதும் அறியாதிருக்கின்றேன்” என்று கூறுவதில் திருவாதவூரடிகள் பெற்ற பேரின்பமாகிய ஆனந்தவெள்ளத்தின் இயல்பு தெளிவாகப் புலனாதலைக் கண்டு மகிழலாம். இதுகாறும் அருளிய பதிகங்கள் யாவும் திருக்கோயிலில் குருந்த மரத்தடியில் ஆசிரியத் திருமேனி கொண்டு ஆட்கொண்ட பின்னரும் அதன் பின்னர் ஆசிரியர் தம் சீடர்களுடன் மறைந்த பின்னரும், அருளப் பெற்றவை யாகும், இதன் பின்னர்ப் பாடியவற்றை அடுத்துக் காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/90&oldid=1013527" இலிருந்து மீள்விக்கப்பட்டது