பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. பெருந்துறை (நகர்) அருளிச் செயல்கள்

குருநாதர் சீடர்களோடும் மறைந்தமைக்கு ஆற்றாது வருந்திப் பல பதிகங்களைப் பாடிய அடிகள் பெருந்துறை நகரினுள் செல்லுகின்றார். அங்குக் காணும் பல காட்சிகள் பற்றி பல திருப்பதிகங்கள் அருளுகின்றார். அவற்றை ஈண்டுக் காண்போம்." 1

18 திருப்பொற் சுண்ணம் (9)

இருபது பாடல்களைக் கொண்ட இ ப் ப னு வ ல் திருக்கோயில்களில் இறைவனது திருமேனிப் பூச்சுக்குரிய பொன்னிறமான மணப்பொடியினை இடிக்கும்பொழுது இளமகளிர் பாடும் வரிப்பாடல்களாக அடிகளால் அருளிச் செய்யப் பெற்றது. பாடல்தோறும் ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே! எனப் பயின்று வருதலால் இப்பனுவல் திருப்பொற் சுண்ணம் என்ற திருப்பெயரைப் பெறுகின்றது. உடற் பூச்சுக்குரிய மணப் பொடியினை இடித்தமைக்கும் செயலில் ஈடுபட்ட மகளிரது உள்ளம் அந்நறுமணத்தின் தொடர்பால் மகிழ்ச்சி நிலையினை அடைதல் இயல்பாகும். இங்ஙனமாகத்


1. ஈண்டுப் பாடியதாகக் குறிப்பிடப் பெறும் "திருஅம்மானை" யை திருவண்ணாமலை அருளிச் செயல்கள்’ (கட்டுரை-7) என்றதன் கீழ்க் காண்க. 2. இது திருத்தில்லையில் அருளிச்செய்யப் பெற்றதாகக் கூறுவர் கடவுள் மாமுனிவர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/91&oldid=1013547" இலிருந்து மீள்விக்கப்பட்டது