பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்துறை அருளிச் செயல்கள் 75




  சத்திகளாற் தநுகரண
     புவனபோ கங்கள்தமை 
  அத்தனுக்குச் சுண்ணமவை 
     யாயிடிக்கக் கூவுதலே     
  ஒத்ததிருச் சுண்ணம். 

எனவரும் திருவாசக உண்மையால் தெளிவாகும்.

சுண்ணம் இடிக்கும் முறைபற்றிய செய்திகள் இப்பனுவற் பாடல்களால் அறிய முடிகின்றது. சுண்ணம் இடத்தை மெழுகித் துய்மை செய்து நவமணியும் பொன்னுமாகிய நிதி பரப்பி முத்துமாலை முதலியவற்றால் அணி செய்து (3) முளைக் குடம் வைத்துத் துரபம் தீபம் முதலியன அமைத்துக் (1) கவரிவீசிக் கொடி எடுத்துச் சிறப்பு செய்யப் பெறும் (3), சுண்ணம் இடிக்கும் கருவியாகிய உரலுக்குப் பட்டுசாத்தி உலக்கைக்குப் பூண் முதலியன அணிந்து நேச முடைய அடியார்கள் நீடு வாழ்க’ என வாழ்த்தி இறைவனைப் பாடுதல் மரபு(4), பொற்சுண்ணத்திற்குரிய மணப்பொருளில் மஞ்சள் சிறப்புடையது (9). சுண்ணம் இடிக்கக் குழுமிய மகளிர்களாக சத்தி (ரெளத்திரி), சோமி (திருமகள்), பார் மகள், நாமகள், சித்தி (கணபதியின்சத்தி), கெளரி (காளி), பார்ப்பதி (உமை), கங்கை என எண்மர் ஒரு பாடலில் (1) குறிக்கப் பெற்றுள்ளனர். இக்குறிப்பினைத் துணையாகக் கொண்டு "அட்ட சிவசத்தியும் திருவையாறகலாத செம்பொற் சோதியை வணங்குதல்" என இப்பதிகத்திற்குக் கருத்துரைப்பர் சீகாழித் தாண்டவராயர்.

ஐயன் அணிதில்லை வாணன் திருமஞ்சனம் ஆடுதற் குரிய அழகிய சுண்ணத்தினை அமைக்க வேண்டுமானால் அதற்கு உலகமே உரலாகவும், மேருமலையே உலக்கை யாகவும், மெய்ம்மையாகிய உயர்ந்த குணமே மஞ்சளாகவும் கொண்டு திருப்பெருந்துறையில் கோயில் கொண்டருளிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/93&oldid=1013666" இலிருந்து மீள்விக்கப்பட்டது