பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76 மாணிக்கவாசகர்


 இறைவனுடைய திருவடிகளைப் பாடிப்பாடிச் செம்பொன் உலக்கையை வலக்கையிற் கொண்டு இடித்தல் வேண்டும். இதனை,

  வையக மெல்லாம் உரலதாக
     மாமேரு என்னும் உலக்கை நாட்டி
  மெய்யெனும் மஞ்சள் நிறையஅட்டி
     மேதகு தென்னன் பெருந்துறையான் 
  செய்ய திருவடி பாடிப்பாடிச்
     செம்பொன் உலக்கை வலக்கைபற்றி 
  ஐயன் அணிதில்லை வாணனுக்கே
     ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே (9)
      (அட்டி - இட்டு: மெய் - உண்மை) 

என வரும் திருப்பாடவில் அடிகள் அருளியுள்ளார். இத்திருப்பாடல் இறைவனது பெருமையினையும் அப்பெருமானது திருமேனிக்குரிய பொற்சுண்ணம் இடித்தலாகிய திருப்பணியின் அருமையினையும் இனிது புலப்படுத்துதல் காணலாம்.

ஒரு பாடலில் சிவதத்துவம் கூறப்பெறுகின்றது.

  மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண்
     வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர் 
  என்னுடை யாரமு தெங்களப்பன்
     எம்பெரு மான்இம வான்மகட்குத் 
  தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன்
     தமையன்எம் ஐயன் தாள்கள்பாடிப் 
  பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர்
     பொற்றிருச் சுண்ணம் இடித்துகாமே (13) 

என்றபாடலில் இத்தத்துவத்தைக் காணலாம், இறைவன் ஆணும் பெண்ணுமாய் உயிர்கட்கு அருள்செய்யும் திருக்குறிப்புடன் சிவமும் சக்தியுமாகத் திகழ்தல்பற்றி சிவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/94&oldid=1014156" இலிருந்து மீள்விக்கப்பட்டது